அமலா பாலுக்கு 7 ஆண்டு சிறை ? வீடியோ இணைப்பு …

முன்னனி நடிகையான அமலா பால் போலியான முகவரி கொடுத்து பென்ஸ் கார் வாங்கிய விவகாரத்தில், அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது.

மைனா படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் மிகவும் அறியப்பட்ட அமலா பால், பின்னர் தெய்வ திருமகள், தலைவா, , வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். தற்போது அவர் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.இந்நிலையில் அவர் புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து ரூ. 1.12 கோடி மதிப்புள்ள எஸ்.கிளாஸ் பென்ஸ் கார் வாங்கினார்.

வரி குறையும் என்பதற்காக இந்த கார் புதுச்சேரியில் போலி முகவரி மூலம் பதிவு செய்துள்ளார். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என தகவல் தெரிவிக்கின்றன.

வீடியோ இணைப்பு –

Facebook Comments