யாழை உலுக்கிய தற்கொலை: இறுதிச்சடங்கு இன்று

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் நேற்று முன் தினம் தற்கொலை செய்த தாய் மற்றும் மூன்று பிள்ளைகளின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நஞ்சு அருந்திய நிலையில் தாய் மற்றும் மூன்று குழந்தைகளின் சடலங்கள் உறவினர்களால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

வைத்தியசாலையில் நிகழ்ந்த பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளினைத் தொடர்ந்து குறித்த சடலங்கள் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பச்சிளம் பாலகர்களின் சடலங்களையும் பார்த்த உறவினர்கள் துக்கம் தாளாது கதறியழுத காட்சி ஏனையோரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நண்பர் ஒருவருக்கு நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கிய கடனை மீளப்பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாகவே குறித்த குடும்பத்தினர் தற்கொலை செய்துகொண்டனர்.

இந்த நிலையில் மரணமானவர்களின் இறுதிச் சடங்குகள் இன்றைய தினம் அவர்களது வீட்டில் நடைபெறவுள்ளது.

Facebook Comments