புதிய சாதனை படைத்தது மெர்சல்

Advertisement

விஜய் நடிப்பில் உலகமெங்கும் வெற்றிநடை போட்டு வரும் `மெர்சல்’ படம் தமிழக அளவில் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு ரிலீசாகி உலகம் முழுவதும் ஓடிக்கொண்டு இருக்கிறது.

மெர்சல் படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி., பணமதிப்பு நீக்கம், டிஜிட்டல் இந்தியா திட்டம் பற்றி குறைகூறி இருப்பதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது. அந்த கட்சி தவிர எதிர்க்கட்சிகள் மெர்சல் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

மெர்சல் பட பிரச்சினையில் பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்தார். டாக்டர்களும் மருத்துவத்தை குறைகூறி இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுபோன்ற காரணங்களால் மெர்சல் படம் கடந்த திரைஉலகிலும், அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனைக்கு முடிவு எட்டப்பட்ட நிலையில், படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் திரையரங்கிற்கு செல்கின்றனர்.

இவ்வாறாக படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும நிலையில், மெர்சல் படத்தின் பாடல்கள் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் புதிய சாதனையை படைத்திருக்கிறது. தமிழ் படங்களில் அதிவேகமாக 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மெர்சல் பாடல்கள் சாதனை படைத்துள்ளதாக சோனி மியூசிக் அதன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் வலைதளங்களில் பகிர்ந்து டிரெண்டாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments