இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு அற்புதமான திரைப்படம்- Unfreedom

இந்த படத்தைப் பார்க்க தூண்டிய விஷயம் , இது இந்தியாவில் தடை செய்யப்பட்ட படம் என்கிற விஷயம் தான்,

இப்படிப்பட்ட படம் எல்லாம் எடுப்பார்களா என யோசிக்க வைத்த படம்.
இருவேறு (சம்மந்தமே இல்லாத) ட்ராக்கில் பயனிக்கும் கதை.
“சுயபாலினத்தவர் மேல் உள்ள ஈர்ப்பு ”

“தீவிரவாதம்”

லெஸ்பியன்ஸ் பற்றி மிக தைரியமாக சில பல நிர்வாணக் காட்சிகளுடன் அவர்களின் உணர்வுகளை காண்பித்து இருக்கிறார் இயக்குனர் .

ஆனால் படம் பார்க்கையில் ஆண்களுக்கே உரிய இகழ்ச்சி நகைப்பொன்று வருமே அது வரவில்லை , அவர்களின் உணர்வு(எனக்கு) ஓரளவிற்கு புரிகிறது.

அதுபோல இன்னொரு ட்ராக்கில் ஒரு முஸ்லிம் (பாகிஸ்தான்) தீவிரவாதியை அவனுடைய மன கலக்கத்தை மிக அருமையாக காண்பித்து இருக்கிறார் .

ஒரு வெளிநாடு வாழ் முஸ்லிம் முற்போக்குவாதி எழுத்தாளரை கடத்தி கொலை செய்ய பனிக்கப்பட்ட தீவிரவாதி அவருக்கு அவர் கொள்கை மேல் உள்ள உறுதியான நிலைப்பாட்டை(அஹிம்சை) பார்த்து இவனுடைய கொள்கை மேல்(வன்முறை) இவனுக்குள்ள தீவிரத்தன்மை உடையும் தருணம் 

க்ளைமாக்ஸ் ஆணாதிக்க சமுதாயத்தை தோலுரித்து காண்பிக்கிறது ,அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் …

பார்க்காதவர்கள் தாராளமாக ஒருமுறை பார்க்கலாம் …
பார்த்தவர்கள் உங்கள் கருத்துக்களை பகிரலாம் .

#unfreedom 2014-2015

#director #Raj_amit_Kumar

Facebook Comments