பேரழகி: ஒரே நாளில் உலகப் பிரபலமான மாணவி

Advertisement

அமெரிக்காவிலுள்ள ப்ளைமவுத் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் இரண்டாம் ஆண்டு மாணவியாக இருக்கிறார் 19 வயது அனோக் யாய். கடந்த வாரம் வாஷிங்டனில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கான விழாவில் அனோக்கும் கலந்துகொண்டார்.

அப்போது இவரை விதவிதமாக ஒளிப்படங்கள் எடுத்து, அவருடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் ஒரு புகழ்பெற்ற ஒளிப்படக் கலைஞர். ஒளிப்படங்களின் கீழே, ‘நான் அந்த விழாவில் அற்புதமான ஒரு பெண்ணைச் சந்தித்தேன்’ என்று எழுதி அனோக் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.

திடீரென்று அந்தப் படங்கள் வைரலாகின. “நாங்கள் எகிப்தில் இருந்து 17 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா வந்தோம். எனக்கு ஃபேஷன் மீது ஆர்வம் அதிகம். மாடலிங் செய்ய வேண்டும் என்பது என் கனவு. ஆனால் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்ததே இல்லை. என்னுடைய 2 படங்களுக்கும் ஏராளமான வரவேற்பு!. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 11 ஆயிரத்துக்கும் மேல் லைக் செய்திருந்தார்கள். என் போன் இடைவிடாமல் நீண்ட நேரம் அலறிக்கொண்டே இருந்தது.

முதலில் யாரோ என் படங்களை வைத்து மீம் உருவாக்கிவிட்டதாகத்தான் நினைத்தேன். பிறகுதான் உண்மையிலேயே என் படங்களை அங்கீகரித்திருக்கிறார்கள் என்று அறிந்தேன். இந்தப் படங்களைப் பார்த்து மிகப் பெரிய மாடலிங் நிறுவனங்கள் என்னை ஒப்பந்தம் செய்துகொள்ள அணுகியுள்ளன. என்னால் இன்னும் கூட இதை நம்ப முடியவில்லை!” என்கிறார் அனோக் யாய்.

அழகு, நிறம் பற்றிய கற்பிதங்கள் மாறிவருவது ஆரோக்கியமானது!

Facebook Comments
Total Page Visits: 9 - Today Page Visits: 1