இதற்கு ஒரு முடிவே இல்லையா?: சொல்லுங்க விஷால் சொல்லுங்க

Subscribe to our YouTube Channel

சென்னை: சித்தார்த்தின் அவள் படம் நெட்டில் கசிந்துவிட்டது.

புதுப்படங்கள் ரிலீஸான அன்றே நெட்டில் கசிந்துவிடுகிறது. சில இணையதள ஆட்களோ குறிப்பிட்ட நடிகர்களின் படம் வெளியானால் அதை சில மணிநேரங்களில் நல்ல பிரிண்டில் வெளியிட்டு விடுகிறார்கள்.

இந்நிலையில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த அவள் ஹாரர் படமும் நெட்டில் கசிந்துவிட்டது. அவள் படம் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ள நிலையில் நெட்டில் கசிந்துவிட்டது.

நெட்டில் கசிந்த அவள் படத்தை நூற்றுக்கணக்கானோர் டவுன்லோடு செய்துள்ளனர். படத்தை வெளிநாட்டில் எங்கோ ஒரு தியேட்டரில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

பல குவாலிட்டிகளில் படத்தை கசியவிட்டு வசூலில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளனர்.

Facebook Comments