மர்மமான முறையில் வீதியில் நசிபட்டு இறந்து கிடந்த 46 பறவைகள்

ஜேர்மனியின் பிரதான வீதி ஒன்றிலே, 46 பறவைகள் இரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்த நிலையில் அவ்வழியால் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்துள்ளனர்.

மத்திய ஜேர்மனியின் பட் வில்டுஜென் (Bad Wildungen) நகரின் முக்கிய வீதியிலேயே, இச்சம்பவம் நடந்துள்ளது.

பறவைகள் நசிந்து இறந்து கிடந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் புகைப்படமாக எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டதில் அது வெகுவாகப் பரவி வருகின்றது.

பறவைகள் எப்படி உயிரிழந்தது என அறியப்படாமலேயே, மர்மமான விலங்கினங்கள் திடீரென்று வானத்திலிருந்து விழுந்து விட்டது என்ற வதந்தி வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments