தனது மரணத்தின் திகதி , நேரம் என்பவற்றை முன்கூட்டியே சொன்ன சென்னை பாட்டி ! அப்படியே நடந்த ஆச்சரிய சம்பவம் !

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த 105 வயது மூதாட்டி ஒருவர் தான் சொன்ன திகதி மற்றும் நேரத்தில் உயிரிழந்துள்ளது ஆச்சயரித்தை ஏற்படுத்தியுள்ளது.105 வயதான வெங்கடலெட்சுமிக்கு தற்போது ஒரு மகனும், மகளும், 5 பேரன், 3 பேத்திகளும், 11 கொள்ளு பேரன், 6 கொள்ளு பேத்திகளும் உள்ளனர். இந்நிலையில் வெங்கடலெட்சுமி நேற்று காலை 4 மணியளவில் இயற்கை மரணம் எய்தினார். 105 வயது வரை வாழ்ந்த வெங்கடலெட்சுமிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் உடல் நிலை சரியில்லாமல் போனது.
இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், ஆனால் அங்கு நான் இருக்கமாட்டேன் எனக்கூறி வீட்டுக்கு வந்துவிட்டார்.

வீட்டுக்கு வந்தவர் தன் குடும்பத்தினரிடம், ‘’நான் நாளை காலை 4 மணிக்கு இறந்து விடுவேன். எல்லோருக்கும் சொல்லிவிடுங்கள்’’ என்று கூறினாராம். பின்னர் அதிகாலை 3.45 மணி வரை குடும்பத்தாருடன் பேசிக் கொண்டு இருந்துவிட்டு பின்னர் சரியாக 4 மணிக்கு சொன்னது போலவே காலமானார் என்று அவரது மகன் கண்ணன் கூறியுள்ளார்.105 வயது வரை வாழ்ந்த வெங்கடலெட்சுமி, இதுவரை மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டதில்லை. கடைசிவரை அவரது அன்றாட பணிகளை அவரே செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments