12 மணிநேரத்தில் சென்னையை தாக்க வருகிறது ஓகி புயல் – வானிலை மையம் எச்சரிக்கை – வீடியோ இணைப்பு …

கன்னியாகுமரி: ஓகி புயல் காரணமாக வீசும் பலத்த காற்றால் குமரி மாவட்டத்தில் மரங்கள் வேறோடு சாய்ந்து வருகின்றன. மரம் சாய்ந்து விழுந்ததில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரிக்கு அருகே உருவாகியுள்ள ஓகி புயல் காரணமாக நேற்று இரவு முதல் அங்கு கனமழையுடன், சூறைக்காற்றும் வீசி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கும் இதே நிலை தான் நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மணிக்கு 85 கிலோ மீட்டரில் வீசத் தொடங்கிய புயல் காற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் சாலையோரங்களில் இருந்த பெரிய பெரிய மரங்கள் வேறோடு சாய்ந்து வருகின்றன. மரங்கள் சாய்வதால் அவற்றோடு மின்கம்பங்களும் சாய்ந்து விழுவதால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடை பட்டுள்ளது.

நாகர்கோவிலில் மரம் சாய்ந்ததில் மரத்தடியில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதே போன்று குழித்துறை அருகே மலையடி பகுதியில் ஒருவரும் உயிரிழந்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஓகி புயலுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.

கன்னியகுமாரி: ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை சின்னாபின்னமாக்கி வருகிறது. இதுவரை 1000க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும், 900 மின்கம்பங்கள் முறிந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் ஓகி புயலாக உருவாகி உள்ளது.

கன்னியாகுமரி அருகே 60 கிலோமீட்டர் தொலைவில் ஓகி புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.புதிதாக உருவான ஓகி புயலால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யுக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. திருச்செந்தூரில் மணிக்கு 40-50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது.

பலத்த மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுழன்றடிக்கும் சூறைக்காற்று கனமழை குமரி மாவட்டத்தில் நீடிப்பதால் பல்வேறு இடங்களில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. 900 மின்கம்பங்கள் முறிந்துள்ளதால் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது.

சூறைக்காற்றுக்கு சாயும் மரங்கள்

இந்த புயல் சின்னம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரைக்காற்று வீசி வருவதுடன், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரப்பர் மரங்களில் கீழ் நிற்காதீர்கள்

மரங்கள் வேரோடு சாய்ந்து விழுவது தொடர்ந்த வண்ணம் உள்ளதால், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மரங்களுக்கு அடியில் தஞ்சம் அடைய வேண்டாம் என்றும் குறிப்பாக ரப்பர் மரங்கள் கீழ் நிற்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

பாதுகாப்பு அவசியம் மக்களே

ஓகி புயல் நிலப்பரப்பில் வராமல் கன்னியாகுமரி கடற்கரை ஒட்டிய பகுதிகளில் நகர்வதை ரேடாரில் காணமுடியும் என்று தெரிவித்துள்ளார் ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளில் இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கன்னியாகுமரியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் பல வீடுகளின் மீது மரங்கள் விழுந்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பாதிப்புக்குள்ளான மக்களை மீட்கவும், புயல் பாதிப்புகளை சீரமைக்கவும் அரக்கோணத்தில் இருந்து 70 பேர் கொண்ட பேரிடர் மீட்புக்குழு குமரி மாவட்டத்திற்கு விரைந்துள்ளது.

சென்னை: கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை பாடாய்படுத்தி வருகிறது ஓகி புயலின் தாக்கம்.. கன்னியாகுமரியில் பல நூறு மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலை, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.

Total Page Visits: 64 - Today Page Visits: 1