வியக்கும் ஆற்றல் உள்ள சிறுமி இவர் (Video)

Advertisement

நேபாளத்தைச் சேர்ந்த 11 வயது தீப்தி ரெக்மியால் கண்ணை மூடிக்கொண்டே ஒரு பொருளின் நிறத்தைக் கண்டுபிடிக்க முடிகிறது!

கண்களைக் கட்டிவிட்டு, இவரிடம் ஒரு பொருளைக் கொடுத்தால் சில நொடிகள் தடவிப் பார்க்கிறார், சில நொடிகள் முகர்ந்து பார்க்கிறார். பிறகு சரியாக நிறத்தைச் சொல்லிவிடுகிறார். அதேபோல் செய்தித்தாளில் உள்ள எழுத்துகளின் வண்ணத்தையும் கையால் தடவி, முகர்ந்து பார்த்துச் சொல்லிவிடுகிறார்.

தீப்தியின் பெற்றோர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். தங்கள் மகளின் திறமையைக் கண்டு பெருமை கொள்கிறார்கள். “யாராலும் செய்ய முடியாததை என் மகள் செய்கிறாள்! அவளின் பெற்றோராக இருப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

சிலர் இது ஏதோ சினஸ்தீசியா குறைபாடு என்று சொல்கிறார்கள். இதுவரை நாங்கள் மருத்துவரிடம் செல்லவில்லை. அவள் மிக நன்றாகப் படிக்கிறாள். புத்திசாலியாகவும் இருக்கிறாள். இத்துடன் வண்ணம் அறியும் திறனையும் பெற்றிருக்கிறாள்” என்கிறார் தீப்தியின் அம்மா. சினஸ்தீசியா மரபணுக் குறைபாட்டால் ஏற்படுகிறது.

இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆண்களைவிடப் பெண்களை அதிகம் பாதிக்கிறது. இந்தக் குறைபாடுடையவர்கள் படைப்புத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Facebook Comments