வாரத்துக்கு 1,700 தடவை காதுக்குள் தொடர்ந்து ஒலிக்கும் தேசியகீதம்: இவருக்கு என்ன பிரச்சினை?

Advertisement

பிரித்தானியாவைச் சேர்ந்த 87 வயது ரான் கோல்ட்ஸ்பிங் காதில் எப்போதும் தேசிய கீதம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. மியூசிக்கல் இயர் சிண்ட்ரோம் என்ற மிக அரிய வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார் இவர். இவரது காது, கேட்கும் சக்தியை இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் ஒரு வாரத்துக்கு 1,700 தடவை தேசிய கீதத்தைக் கேட்பதாகச் சொல்கிறார்.

“3 மாதங்களுக்கு முன்புதான் எனக்கு இந்தப் பிரச்சினை ஆரம்பித்தது. முதல் நாள் தேசிய கீதத்தை அடுத்தடுத்து கேட்டபோது கோபம் வந்தது. உடனே பக்கத்து வீட்டுக்காரரிடம் தேசிய கீதத்தை நிறுத்தும்படி சண்டையிட்டேன்.

ஆனால் அவர் தங்கள் வீட்டில் எந்தப் பாடலையும் ஒலிக்கவிடவில்லை என்று கூறிவிட்டார். ஆனாலும் பாடல் கேட்டுக்கொண்டே இருந்தது. என் மகனிடம் முறையிட்டேன். மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.

இது அரிய குறைபாடு என்றும் மருத்துவம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறிவிட்டார். ஆனால் இந்தத் தொல்லையிலிருந்து நான் எப்படி விடுபடுவது என்று தலையை சொறிகிறார் ரான் கோல்ட்ஸ்பிங்.

Facebook Comments