நடிகைகளைப் பாதுகாக்க களமிறங்கும் பெண் கறுப்புப் பூனைகள்

நடிகைகளை பாதுகாக்கப் பெண்களை கொண்ட கருப்பு பூனைப்படை அமைக்க மலையாள தொழில்நுட்ப கலைஞர்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.

பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் பல துறைகளிலும் தொடர்ந்து வரும் நிலையில் திரைத் துறையிலும் நடிகைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். இதனைத் தடுக்கும் முயற்சியில் தற்போது மலையாள திரையுலகினர் ஈடுபட்டுள்ளனர். நடிகைகளை பாதுகாக்க பெண்களை கொண்ட கருப்பு பூனைப்படை அமைக்க மலையாள தொழில்நுட்ப கலைஞர்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.

பெண் கருப்பு பூனைப்படையில் இருக்கும் பெண்களுக்கு தற்காப்பு கலைகளான கராத்தே கேரளாவின் பாரம்பரிய தற்காப்பு கலையான களரி ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் இப்பயிற்சி பெற்ற பெண்கள் நடிகைகளுக்குப் பாதுகாப்பாக படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு செல்வார்கள். மேலும் அவர்களுக்கு வாகனம் ஓட்டும் பயிற்சியும் அளிக்கப்பட்டு நடிகைகளுக்கு பாதுகாப்பாக பிரத்யேக பணிகளிலும் அமர்த்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இது குறித்து மலையாள தொழில்நுட்ப கலைஞர்கள் அமைப்பின் பொதுச்செயலாளர் பைஜூகொட்டாராக்கரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மலையாள நடிகை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பின் நடிகைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பெண்களை கொண்ட கருப்பு பூனைப்படை அமைக்க முடிவு செய்துள்ளோம். இதற்காகத் திரைத்துறையை சேர்ந்த சண்டைப்பயிற்சி பிரிவினர் இந்தப்படையில் சேரும் பெண்களுக்கு 6 மாத காலம் தீவிர பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

Total Page Visits: 169 - Today Page Visits: 3