இனி கொஞ்ச நாள் நான் பஸ்ல தான் போவேன்: லக்ஷ்மி சொல்வதன் அர்த்தம் (Video)

Advertisement

லக்ஷ்மி குறும்படம் இணையத்தில் வைரல் ஹிட் ஆகியுள்ளது. அதே நேரம் பல சர்வதேச விருதுகளையும் வாங்கி குவித்துள்ளது. பாரதியாரின் புதுமைப்பெண் தவறாக விளங்கிக் கொள்ள வைக்கப்படுகிறாள் என பலத்த விமர்சனங்களும் எழுந்துள்ளன.

கணவன், குழந்தையை கவனித்து அனுப்பிவிட்டு வேலைக்குச் செல்லும் நடுத்தர வர்க்கப் பெண்ணான லட்சுமிக்கு ஒரு ஆணின் அறிமுகம் கிடைக்கிறது. அந்த அறிமுகம் எப்படி பரிணாமிக்கிறது என்பதுதான் கதை. சேகரின் மனைவி லட்சுமிக்கு வாழ்க்கை கறுப்பு வெள்ளையாய் நகருகிறது.

அன்றாட பணிகள், அலுவலக சுமைகள், கணவனின் உடல் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும் லட்சுமியின் வாழ்க்கை கதிர் என்கிற ஆணின் மூலம் வண்ணமயமானதாக மாறுகிறது. கடைசியில் கதிரின் தேவையும் உடல் தேவைதான் என்பதை உணர்ந்து லட்சுமி விலக, வாழ்க்கை மீண்டும் கறுப்பு வெள்ளையாக மாறுவதாக படம் முடிகிறது.

ஒரு பெண்ணின் பாலியல் சுதந்திரம் குறித்துப் பேசும் படமென்பதால் பாராட்டுகளும் விமர்சனங்களும் குவிகின்றன.

தமிழில் முன்தினம் பார்த்தேனே படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி பிரியா. இவரது நடிப்பு இயல்பானதாக இருக்கிறது. லட்சுமி குறும்படம் சர்வதேச படவிழாக்களில் விருதுகளை குவித்து வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற சினி பெஸ்ட் விழாவில், லக்ஷ்மி குறும்படம் அரை இறுதி சுற்றில் வெற்றி பெற்றது. இந்த படம் சமூக வலைத்தளங்களில் கடும் விவாதப்பொருளாகி வருகிறது.

கடைசியில் லக்ஷ்மி சொல்லும் “இனி கொஞ்ச நாள் நான் பஸ்ல தான் போவேன்” என்கிற வசனம் என்ன அர்த்தத்தில் சொல்லப்பட்டது எனவும் நெட்டிசன்கள் துருவி வருகின்றனர்.

சமூக வலைத்தள பதிவரின் விளக்கமொன்று,

லஷ்மி தன் அன்றாட வாழ்வில் அலுப்பு , கதிரின் மீதான ஈர்ப்பாகிவிட்டது… லஷ்மியின் கணவனுக்கு, பெயர் தெரியாத பெண்ணிடம் இருந்து call வந்தநாள் இரவு, அவள் இப்படி சொல்வாள், “யாருக்குதான் தப்பு பண்ண தோனாது, நா ஒன்னும் விதி விலக்கில்லையே, எனக்கும் தோனுச்சு”,

அவள் கதிரை சந்தித்தது, பழகியது எல்லாம் முன்பு நிகழ்ந்தது…
தற்போது, அவள் கணவனுக்கும் அப்படி அழைப்பு வர, தன் தவறை உணர்கிறாளோ, என்னவோ!… அடுத்த நாள் காலை, கதிரை தவிர்ப்பதற்காக, ரயிலில் செல்லாமல், பேருந்தில் செல்கிறாள்…

Facebook Comments