செம ஆடம்பரமான புரப்போசலால் அதிர்ந்த காதலி (Video)

Advertisement

சீனாவின் ஷென்ஸென் பகுதியைச் சேர்ந்த சென் மிங், வீடியோ கேம் டிசைனராக இருக்கிறார். கடந்த நவம்பர் 3-ம் தேதி புதுமையான முறையில் தன்னுடைய திருமண கோரிக்கையை லீயிடம் வைத்தார். சமீபத்தில் அறிமுகமான ஐபோன் எக்ஸ், ஸ்மார்ட்போன்கள் என்று மொத்தம் 25 போன்களை வாங்கினார்.

ஒரு பொது இடத்தில் இதய வடிவில் ரோஜா இதழ்களைத் தூவி, போன்களை வரிசையாக வைத்துவிட்டார். நடுவில் ஒரு மோதிரமும் வைக்கப்பட்டிருந்தது. அந்த இடம் வண்ண பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நண்பர்களின் உதவியுடன் லீயை அழைத்து வரச் சொன்னார். லீ இதை எதிர்பார்க்காததால் ஆச்சரியமடைந்தார்.

உடனே மோதிரத்தை நீட்டி, தன்னுடைய திருமணக் கோரிக்கையை வைத்தார் சென் மிங். லீயும் சம்மதம் தெரிவித்துவிட்டார்.

“நானும் லீயும் 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தோம். இருவருக்குமே வீடியோ கேம்கள் மீது அதிக ஆர்வம் இருந்ததால் நல்ல நண்பர்களாக மாறினோம். திருமண ஆசை வந்தது. லீயின் வயது 25. அதனால் 25 ஸ்மார்ட்போன்களை வாங்கினேன். 20 லட்சம் ரூபாய் செலவு செய்ததற்கு பதில் ஒரு கார் வாங்கிக் கொடுத்திருக்கலாம், ஒரு வீடு வாங்கியிருக்கலாம் என்கிறார்கள். அவர்கள் சொல்வதும் சரிதான். ஆனால் எங்கள் வாழ்க்கையின் முக்கியமான தருணத்தை நான் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைத்ததில் தவறில்லை” என்கிறார் சென் மிங்.

Facebook Comments
Total Page Visits: 1 - Today Page Visits: 1