திருப்பதியில் மோதிரம் மாற்றினார் நமீதா: நிச்சயதார்த்தம் விமரிசை (Video)

இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான மல்லிரெட்டி வீரேந்திர சவுத்ரி என்பவருக்கும், நடிகை நமீதாவுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு திருப்பதியில் உள்ள இஸ்கான் கோவிலில் திருமணம் நடக்க உள்ளது.

அதையொட்டி இருவரும் நேற்று மாலை ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்டு ரேணிகுண்டா வந்தனர். ரேணிகுண்டாவில் இருந்து கார் மூலம் திருப்பதிக்கு வந்தனர்.

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் எதிரே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இருவருக்கும் நேற்று இரவு 8 மணியளவில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. காதலருடன் மோதிரத்தை மாற்றிக் கொண்டார் நமீதா.

அதில் முக்கியமான நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. திருமண நிச்சயதார்த்தத்தில் ஒருசிலர் மட்டுமே பங்கேற்றனர்.

அண்மையில் நடந்து முடிந்த விஜய் ரிவியின் பிக் பொஸ் நிகழ்ச்சி மூலமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நமீதா என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments