யூடியூப் உடனான போட்டியில் ஜெயிக்குமா பேஸ்புக்?

பேஸ்புக் நிறுவனம் ‘வாட்ச்’ என்ற புதிய வீடியோ வசதியை யூடியூப்புக்குப் போட்டியாக வெளியிட்டுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் முதன்மையான சமூக வலைதளம் என்ற இடத்தை தக்கவைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் வாட்ச் என்ற வீடியோ பதிவிடும் வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் அமெரிக்காவில் வெளியிட்டது. அமெரிக்காவில் உள்ள பயனர்கள் மட்டும் பயன்படுத்தி வரும் இந்த வசதியை இந்தியாவிலும் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த வசதியை ஃபேஸ்புக் அப்ளிகேஷன் மூலம் கணினி, ஸ்மார்ட்போன் என அனைத்திலும் பெற முடியும். இந்த வசதியை அடுத்த வருடம் (2018) ஜனவரி அல்லது பிப்ரவரியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் வீடியோக்களை பதிவிடுவது மட்டுமின்றி லைவ் வீடியோக்களை அப்லோடு செய்து கொள்ளவும், வீடியோக்களை எடிட்டிங் செய்து பதிவிடவும் முடியும். இந்த வாட்ச் என்ற புதிய வசதியானது வெளியான பின்னர் யூடியூப் பெருமளவில் பாதிக்கப்படும் என்றே கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஏனெனில் யூடியூப்பில் பயனர்கள் அதிகம் தேடும் தேடல்களுக்கு ஏற்றார்ப் போல் வீடியோக்கள் அவர்களுக்கு அனுப்பப்படும். அதுபோன்றே இதில் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் யூடியூப்பில் உள்ள வசதிகளே இதில் இணைக்கப்பட்டுள்ளது என்றாலும், பெரும்பாலான நபர்கள் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவிடுவதால், அதனுடன் வழங்கப்படும் இந்த வாட்ச் என்ற புதிய வசதியை அதிக பயனர்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments