டிரம்ப் மகளுக்கு மோடி என்ன பரிசளித்தார் தெரியுமா? (Video)

தென் இந்தியாவின் தெலுங்கனா மாநிலத்தில் உள்ள மாநகரான ஐதராபாத்துக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்புக்கு பிரதமர் மோடி மரத்தால் செய்யப்பட்ட பெட்டியை பரிசளித்தார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு இவர் தலைமை தாங்கி அழைத்து வந்தார். இவாங்காவுக்கு மிரட்டல்கள் இருப்பதால் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே நேற்று இரவு வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையில் அரசு சார்பில் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரை…

இந்த விருந்தில் இவாங்கா டிரம்ப், பிரதமர் மோடி மற்றும் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், முதல் முறையாக இந்தியா வந்துள்ள அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்புக்கு பிரதமர் மோடி மரத்தினால் ஆன பெட்டியை பரிசாக அளித்துள்ளார்.

மரத்தால் ஆன இந்த பெட்டி குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் பாரம்பரிய கைவினை கலைஞர்களால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Total Page Visits: 93 - Today Page Visits: 1