6 கியர் 650 சிசி: றோயல் என்பீல்டின் அட்டகாசமான புதிய வரவு இது (Video)

றோயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ரக மோட்டார் சைக்கிள்கள் மிலான் நகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஐஷர் குழுமத்தின் அங்கமான றோயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் இன்டர்செப்டர் (interceptor) எனும் 650 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

மிலான் நகரில் நடைபெற்ற இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் காண்போரை வெகுவாகக் கவர்ந்தன. நகர்ப்புறங்களில் எளிதாக செல்வதற்கு வசதியாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வசதியோடு இவை இரட்டை சொக் அப்சார்பரை கொண்டு வந்துள்ளன. காரில் உள்ளதைப் போன்று ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) இதில் உள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிளுமே 650 சிசி திறன் கொண்டவை. 8 வால்வு, ஏர்/ஆயில் கூல் இன்ஜின், 47பிஹெச்பி மற்றும் 52 நியூட்டன் மீட்டர் திறன் கொண்டவையாகும். முதல் முறையாக 6 கியர்களைக் கொண்டதாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதன் சேசிஸ் இங்கிலாந்தில் உள்ள என்பீல்டு தொழில்நுட்ப மையத்தில் வடிவமைக்கப்பட்டதாகும். அடுத்த ஆண்டு ஏப்ரலில் இந்தியாவில் இவ்விரண்டு மாடல் மோட்டார் சைக்கிளும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Facebook Comments