உங்கள் இன்றைய ராசி பலன்-22/11/2017

Subscribe to our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

தவிர்க்க முடியாத சில சூழ்நிலையில் அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் நீங்கள் அமைதியாக இருக்க முயற்சி செய்ய வேம்டும். நிலைமை சமாளிக்க உடனடியாக ரியாக்ட் பண்ணக் கூடாது. நீண்டகாலம் நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் பில்களை சவுகரியமாக செலுத்தும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்திருந்தால் பொழுதுபோக்கு மகிழ்வாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையில் கசப்பான நிகழ்வுகளை மன்னித்திடுங்கள். சில்லறை வணிகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு நல்ல நாள் செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். நீங்களும் உங்கள் துணையும் உங்கள் திருமண வாழ்கையிலேயே மிக சிறந்த நாளாக இந்த நாளை நினைவில் கொள்வீர்கள்.

 

ரிஷபம் ராசிபலன்:

ஆரோக்கியப் பிரச்சினைகள் வரலாம்- எனவே ரெகுலராக உடற்பயிற்சி செய்யவும். வருமுன் காப்பதே நல்ல தீர்வு என்பதை நம்புங்கள். வீட்டுக்கான ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். நில பிரச்சினை தகராறை ஏற்படுத்தலாம். பிரச்சினையைத் தீர்க்க பெற்றோரின் உதவியை நாடுங்கள். அவர்களின் வழிகாட்டுதலின்படி நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக பிரச்சினையைத் தீர்க்க முடியும். சில இயற்கை அழகால் இன்று மயங்கப் போகிறீர்கள். இன்று நீங்கள் செழுமையான காதல் சாக்லேட்டை உண்டு களிப்படையலாம். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். இன்று நீங்கள் ஒரு இனிமையான சர்ப்ரைசை உங்கள் திருமண வாழ்வில் பெறுவீர்கள்.

 

மிதுனம் ராசிபலன்:

வெளிப்புற பார்ட்டிகளும் மகிழ்ச்சியான சந்திப்புகளும் இன்றைய நாளை நல்ல மன நிலையில் வைத்திருக்கும். கமிஷன்கள் – டிவிடெண்ட்கள் – அல்லது ராயல்டிகள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். உங்கள் அன்புக்குரியவர் அல்லது துணைவரிடம் இருந்து வரும் ஒரு நல்ல தகவல் இன்றைய நாளின் நல்லெண்ணத்தை மேம்படுத்தும். புதிய ஐடியாக்கள் பயன்தரும். இன்றைக்கு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாதீர்கள். உங்கள் வாழ்க்கை துணை இன்று அற்புதமாக வேறு என்றுமே இருந்த்தில்லை என்னும் அளவுக்கு நடந்து கொள்வார்கள்.

 

கடகம் ராசிபலன்:

துறவி போன்ற ஒருவரி்ன் ஆசிர்வாதத்தால் மன அமைதி கிடைக்கும். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். தூரத்து உறவினரிடம் இருந்து நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த தகவல் உங்கள் குடும்பத்தினருக்கு, குறிப்பாக உங்களுக்கு நல்ல செய்தியைக் கொண்டு வரும். புதிய காதல் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால் அந்தரங்கமான, ரகசியமான தகவல்களை வெளிப்படுத்தாதீர்கள். சகாக்களும் சீனியர்களும் முழு ஒத்துழைப்பு தருவார்கள் என்பதால் அலுவலக வேலை சூடுபிடிக்கும். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். உங்கள் மனதுக்கினியவரான உங்கள் துணை ஒரு அற்புதமான சர்ப்ரைசை உங்களுக்கு அளிப்பார்.

 

சிம்மம் ராசிபலன்:

ஆரோக்கியத்தை நிச்சயமாக கவனிக்க வேண்டும். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். நிலுவையில் உள்ள வீட்டு வேலைகளில் சிறிது நேரம் செலவாகும். சிறந்த நடத்தையை பின்பற்றுங்கள்- ஏனெனில் இன்று காதலரை அது அப்செட் பண்ணாது. ஒரு சமயத்தில் ஒரு படி என முக்கிய மாற்றங்களைச் செய்தால் -நிச்சயமாக வெற்றி உங்களுக்கே. கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். உங்கள் வேலை பளுவினால் தன்னை உதாசீனப்படுத்துவதாக உங்கள் துணை நினைக்க கூடும். இதனால் உங்கல் துணைவர்/ துணைவி மாலையில் வேதனையுடன் காணப்படுவார்.

 

கன்னி ராசிபலன்:

மாலையில் மூவி-தியேட்டர் அல்லது டின்னரின்போது உங்களை ரிலாக்ஸாக மற்றும் அற்புதமான மனநிலையில் வைத்திருக்க வாழ்க்கைத் துணைவர் விரும்புவார். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். முதியவர்களிடம் உங்கள் லட்சியங்களை வெளிப்படுத்துங்கள், அவர்கள் முடிந்த வரை உதவி செய்ய முயற்சிப்பார்கள். உங்கள் குழுவில் செயல்பட்டால் ஸ்பெஷலான ஒருவரின் பார்வையில் படுவீர்கள். லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள் மற்றும் திறமைகளை கற்றுக் கொள்ள உதவும் வகையில் குறுகிய கால புரோகிராம்களில் சேர்ந்து கொள்ளுங்கள். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். திருமண வாழ்க்கையில் ஒரு கடினமான அத்தியாயத்தை சந்தித்த பின் இன்று உங்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசும்.

 

துலாம் ராசிபலன்:

வாயுக் கோளாறு உள்ள நோயாளிகள் எண்ணெய் உள்ள மற்றும் கொழுப்புச் சத்துள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். அது நோயை அதிகரிக்கும். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். இன்று உங்களுக்கு புதிய தோற்றம் – புதிய அவுட்பிட் – புதிய நண்பர்கள் அமையலாம். உங்கள் துணையை நீங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். முக்கியமான பிசினஸ் முடிவுகள் எடுக்கும்போது பிறருடைய நெருக்குதலுக்கு பணியாதீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். திருமண வாழ்க்கை ஒரு ஆசீர்வாதம், அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள்..

 

 

விருச்சிகம் ராசிபலன்:

குடும்பத்தின் நலனுக்கு எதிராக செயல்படாதீர்கள். அவர்களின் கருத்துகளில் ஒப்புதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களின் செயல்பாடு சீரியசான பிரச்சினையை ஏற்படுத்தலாம். மாறாக, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் வகையில் திட்டத்தை நீங்கள் செயல்படுத்த வேண்டும். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. குடும்பத்தில் உறவுகளையும் பந்தங்களையும் புதுப்பித்துக் கொள்ளும் நாள் ரொமாண்டிக்கான மூவ்களுக்கு இன்று பலன் இருக்காது. மனமகிழ்வுக்கும் பொழுதுபோக்கிற்கும் நல்ல நாள். ஆனால் நீங்கள் வேலை செய்வதாக இருந்தால் உங்கள் பிசினஸ் டீலிங்கில் கவனமாகப் பார்க்க வேண்டும். உங்களின் பலங்களையும் எதிர்கால திட்டங்களையும் மறு-மதிப்பீடு செய்வதற்கான நேரம். அவர்/அவளின் பிறந்த நாளை மறத்தல் போன்ற விஷயத்துக்காக உங்கள் மேல் கோபத்தில் இருக்கலாம். ஆனால் மாலையில் அந்த ஊடல் மறையும்.

 

தனுசு ராசிபலன்:

மகிழ்ச்சி என்பது வெளியில் இருந்து பெறுவது அல்ல, நமக்குள்ளே இருப்பது என்பதை உணர்த்துவதால் உங்களைப் போல நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளும் எண்ணம் மற்றவர்களுக்கும் ஏற்படும். இன்று நிலம், ரியல் எஸ்டேட் அல்லது கலாசார திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். முடிவெடுப்பதில் பெற்றோரின் உதவி அவசியமானதாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பதில் நேரத்தை வீணடிக்காதீர்கள். சக அலுவலர்கள் அல்லது உடன் பணியாற்றுபவர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பார்கள். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். ஒரே வீட்டில் ஒருவருடன் இணைந்து வாழும்போது சண்டைகள் ஏற்படுவது இயல்பு. இன்று உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

 

மகரம் ராசிபலன்:

வெளிப்புற வேலைகள் இன்றைக்கு களைப்படைய செய்வதாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். சிலர் உங்களை பதற்றமடையச் செய்யலாம். அவர்களைப் புறக்கணியுங்கள். மனதிற்கினியவரிடம் அக்கறையில்லாமல் இருப்பதால் வீட்டில் பதற்றமான சூழ்நிலை ஏற்படலாம். அதிக வேலை அழுத்தம் இன்று ஏற்படலாம். எனவே கவனத்துடன் செயல்படவும். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். ஒரு உறவினர், நன்பர் அல்லது அண்டை வீட்டாரால் இன்று உங்கள் திருமண வாழ்வில் டென்ஷன் ஏற்பட கூடும்.

 

கும்பம் ராசிபலன்:

தொடர்ச்சியான பாசிடிவ் சிந்தனைக்கு வெகுமதி கிடைக்கும். உங்கள் முயற்சியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இன்று எதிர்பார்த்த நிதி லாபம் தாமதமாகும். வீட்டு வேலைகளில் இருந்து விலகி இருப்பதும் பணத்துக்காக பிதற்றிக் கொண்டிருப்பதும் இன்று திருமண வாழ்வை பாதித்துவிடும். உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக அழகாக பூத்து குலுங்கும். ஆபீசில் உங்களை வெறுப்பவர்கள் இன்று மேலும் வெறுப்பேற்றக்கூடும். இதனால் நீங்கள் கோபமடைய கூடும். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இன்று, காலையிலேயே ஒரு இனிய பரிசினை பெறுவீர்கள் அதனால் நால் முழுவது குதூகலமாக இருக்கும்.

 

மீனம் ராசிபலன்:

உடல்நலனில் சிறிது அக்கறை தேவைப்படும். பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். ‘சில எதிர்பாராத பிரச்சினைகளால் குடும்பத்தில் அமைதி கெடும். ஆனால் கவலைப்பட எதுவும் இல்லை. காலப்போக்கில் இது தீர்க்கப்படும். இப்போதைக்கு அதை லைட்டாக எடுத்துக் கொண்டால் போதும். கடவுளை வணங்குவது போல தெய்வீகமானது காதல். ஆன்மிகம் மற்றும் பக்தியை போல தூய்மையானது காதல் என்பதை நீங்கள் உணரும் நாள் இது. வேலையில் சிறப்பாக பணியாற்றியமைக்கு இன்று நீங்கள் இன்று எல்லோராலும் கவனிக்கப்படுவீர்கள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். Iசில நாட்களாக நீங்களும் உங்கள் துணையும் மிக மகிழசியாக இல்லாவிடினும் இந்த நாள் உங்களுக்கு மிக மகிழ்சிகரமான நாளாகவே அமையும்.

Facebook Comments