அமெரிக்காவின் அதிரடித் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி (Video)

Advertisement

சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு தீவிரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது.

உள்நாட்டு ராணுவ வீரர்கள் மீது அவ்வப்போது அதிரடியாக தாக்குதல் நடத்திவரும் இந்த தீவிரவாதிகள் மத்திய ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் பன்னாட்டு அமைதிப் படையினரையும் கொன்று குவிக்கின்றனர்.

இந்நிலையில், சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு நகரின் வடமேற்கு திசையில் 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தீவிரவாதிகள் முகாம் மீது நேற்று காலை சுமார் 10:30 மணியளவில் சோமாலியா அரசு படைகளிடன் இணைந்து அமெரிக்கா ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆப்ரிக்காவில் உள்ள அமெரிக்க கூட்டுப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments
Total Page Visits: 3 - Today Page Visits: 1