அறிமுகமானது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் (Video)

Advertisement

விவோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் நவம்பர் 20 இல் இந்தியாவில் அறிமுகமானது. இதற்கு முன்னர் v7+ என்ற மாடலை வெளியிட்ட இந்த நிறுவனம் அதே அளவிற்கு வசதிகளைக் கொண்ட புதிய மாடலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாகத் திகழ்ந்து வரும் விவோ நிறுவனம் அவ்வப்போது குறைந்த விலையில் அதிக வசதிகளைக் கொண்ட மாடல்களை வெளியிட்டு பயனர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதனடிப்படையில் நேற்று (நவம்பர் 20) V7 என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.

விவோ V7 என்ற மாடல் 5.7 இன்ச் திரையளவுடன் 3000mAH பேட்டரி சக்தியுடன் வெளியாகி உள்ளது. 4GB RAM மற்றும் 32GB Internal storage கொண்டுள்ள இந்த மாடல் Qualcomm Snapdragon 450 ப்ராசெஸ்சருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சமாக முன்புறம் 24MP கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் 16MP கேமரா உள்ளது.

இதில் 7.1 ஆன்ட்ராய்டு os மட்டுமின்றி Funtouch OS 3.2 வழங்கப்பட்டுள்ளது. இந்த os கொண்டு கெஸ்ட்சர் வசதிகளை பயன்படுத்த முடியும். இதற்கு முன்னர் வெளியான v7+ மாடல் ரூ.24,000 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த புதிய மாடலின் விலை 18,000 இந்திய ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் அதே வசதிகளைக் கொண்டுள்ள மாடல் என்பதால் இதன் வரவேற்பு நன்றாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய மாடலின் விலை பிற நிறுவனங்களின் மாடல்களை ஒப்பிடும் பொழுது மிகக் குறைவு என்பதால் பெரும்பாலான முன்னணி நிறுவனங்களின் மாடல்களுக்கு பெரும் போட்டியாக அமைந்து உள்ளது.

Facebook Comments