வெளியாகிறது மற்றுமொரு ஈழத் திரைப்படமான யாழ் (Video)

Advertisement

ஈழத் தமிழர்களின் பெருமை பேசும் படம் ‘யாழ்’ என்று அப்படத்தின் இயக்குநர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

டேனியல் பாலாஜி, வினோத், சசி, நீலிமா,லீமா,மிஷா ரக்சனாவும் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘யாழ்’. இதில் ஈழத்துக் கலைஞர்களும் நடித்துள்ளனர்.

ஆதி கருப்பையா, நஸீர் ஒளிப்பதிவில், அருணகிரி இசையில் உருவான இப்படத்தின் கதை, திரைக்கதை,வசனம் எழுதி தயாரித்து எம்.ஸ் ஆனந்த் இயக்கியுள்ளார்.

படம் குறித்து ஆனந்த் கூறுகையில், ” ‘யாழ்’ திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி. இத் திரைப்படத்தின் கதை ஆரம்பம் முதல் இறுதிவரை இலங்கையில் நடக்கிறது.இதில் இந்திய தமிழ் கதாபாத்திரம் எதுவும் கிடையாது. அனைத்து கதாபாத்திரங்களும் ஈழத் தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தின் பாடல்கள் ஈழத்தமிழில் இருப்பதும்.பாடலாசிரியர்களும் இலங்கைத்தமிழர்களே என்பதும் இதுவே முதல் முறை. வசனம் முழுவதும் இலங்கைத் தமிழிலே இருக்கும்.

‘யாழ்’ என்பது ஈழத் தமிழர்களால் உருவாக்கப்படட ஒரு இசைக் கருவியாகும்.பாணர்கள் என்பவர்கள் இக் கருவியை வைத்துக்கொண்டு சைவ சித்தாந்தக் கருத்துக்களையம், தமிழர்களின் கலை, மற்றும் கலாசாரத்தையும், பண்பாட்டையும் ஊர் ஊராக சென்று பரப்பியதால்தான் ‘யாழ்ப்பாணம்’ என்ற பெயர் வந்தது.

மேலும் யாழ் இசையும்,கலையும், கலாசாரமும் சம்பந்தப்படுத்தி கதாபாத்திரங்களுக்கிடையே நட்பு, காதல் போன்ற உணர்வுகளை ஜனரஞ்சகமாக எடுத்துள்ளோம்” என கூறினார்.

Facebook Comments