அமெரிக்காவில் திடீர் நிலநடுக்கம்

அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் தென்மேற்கு பகுதியில் நேற்று 5.0 ரிக்டரில் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் அப்பகுதி முழுவதும் அதிர்ந்தது. வீடுகள் குலுங்கின. எனவே பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்ட வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

அலாஸ்காவின் அத்கா நகரின் தென்மேற்கு பகுதியில் சுமார் 83 கிலோமீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 46.8 கிலோமீட்டர் ஆழத்தில் 5.0 ரிக்டரில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலில் வழக்கத்தை விட அதிக உயரத்துக்கு அலைகள் எழும்பின. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை.

உயிரிழப்பு, சேத விவரம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் அலாஸ்கா மாகானத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.

Facebook Comments