மாணவி சொன்ன ஒற்றை வார்த்தையால் கை கட்டி நின்ற மாவட்ட ஆட்சியர்..!

இந்திய ஆட்சியர் தேர்வில் வெற்றி பெற விரும்பிய ஒரு மாணவியை ஊக்குவிக்க தனது வாகனத்தில் ஆட்சியாளர் அமர வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.சென்ற வருடம் பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளர் கந்தசாமி கலந்துக் கொண்டு பரிசுகளை வழங்கி உள்ளார். அப்போது பரிசு பெற்ற மாணவிகளில் ஒருவரான மோனிஷா தனக்கு ஐ ஏ எஸ் படித்து தேர்ச்சி பெற்று கந்தசாமி போல் தானும் மாவட்ட ஆட்சியாளராக ஆசை என குறிப்பிட்டார்.

இதைக் கேட்டு கந்தசாமி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அந்த மாணைவியை ஊக்குவிக்க அவர் தனது அரசு வாகனத்தில் தனது இருக்கையில் அவரை அமர வைத்து அவர் முன் தான் கைகட்டி நிற்பதைப் போல் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தின் ஒரு பிரதியை மாணவியிடம் அளித்த கந்தசாமி இது வெறும் நிழல்தான் எனவும் அந்த மாணவி நன்கு படித்து இதை நிஜமாக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தயக்கமில்லாமல் மாணவி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை..? கை கட்டி நிற்கும் மாவட்ட ஆட்சியர்..!! திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் சிப்காட் லோட்டஸ் நிறுவனம் சார்பில் கல்வி துறைக்கு பல நலதிட்டங்கள் மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி அவர்களது தலைமையில் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் சிறந்த கல்வி பணி ஆற்றிவரும் முதன்மை கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார் அவர்களும் கலந்து கொண்டார்.

விழாவில் செய்யார் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி மோனிஷா 10ஆம் வகுப்பில் 491 மதிப்பெண் பெற்றதை பாராட்டி கல்வி உதவி தொகை மாவட்ட ஆட்சியர் மூலம் மாணவிக்கு வழங்கப்பட்டது. அந்த மாணவி மோனிஷா மாவட்ட ஆட்சியரிடம் ” நான் படித்து உங்களை போல மாவட்ட ஆட்சியர் ஆக போகிறேன்” என்றார். உடனே நம் மதிப்புமிகு ஆட்சியர் ” வாழ்த்துக்கள் மோனிஷா! என் காரில் என் இருக்கையில் உட்கார்ந்து கொள்” என கூறி யாரும் எதிர்பாராத நிலையில் அந்த மாணவியை சற்று நேரம் ஆட்சியரின் சைரன் பொருத்திய அரசு காரில் தன் இருக்கையில் அமர வைத்து தான் நின்று கொண்டு அந்த மாணவியை புகைப்படம் எடுக்க சொன்னார்.

பின்னர் அந்த மாணவியிடம், ” இந்த புகைப்படத்தை நீ பார்க்கும் போதெல்லாம் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற உத்வேகம் எப்போதும் இருக்கும். நானும் உன்னை போல்தான் அரசு பள்ளியில் படித்துதான் மாவட்ட ஆட்சியராக உயர்ந்தேன்” என்றார்.இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கல்விக்காக பல பணிகளை செய்து வருகிறார். அவருடன் இணைந்து நம் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களும் மாவட்ட கல்வி முன்னேற பாடுபட்டு வருகிறார்.

அப்போது, “நானும் உங்களைப்போல் கலெக்டராக வேண்டும். இதுவே என் லட்சியம்”, என மாணவி மோனிஷா மாவட்ட ஆட்சியரிடம் கூறினார். இதையடுத்து, நிகழ்ச்சி முடிந்ததும், மாவட்ட ஆட்சியர் மாணவி மோனிஷாவை தன்னுடைய சைரன் பொருந்திய அரசு காரில், தான் அமரும் இருக்கையில் அமர வைத்தும், அருகில் அவர் நின்றுகொண்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

“இந்த புகைப்படத்தை பார்க்கும்போது கலெக்டராக வேண்டும் என்ற எண்ணம் உன் மனதில் உதிக்க வேண்டும். நானும் அரசு பள்ளியில் படித்துதான் கலெக்டர் ஆனேன்”, எனக்கூறி ஊக்கப்படுத்தினார். இதையடுத்து, மாணவி மோனிஷா மாவட்ட ஆட்சியருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்.

மாவட்ட ஆட்சியரின் இந்த செயலை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Facebook Comments