தஷ்வந்த் மீது நீதிமன்ற வளாகத்தில் பெண்கள் செருப்படி தாக்குதல் !

Advertisement

ஹாசினி கொலை வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட தஷ்வந்த் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. தாயை கொன்ற வழக்கில் மும்பையில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறுமி ஹாசினி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த வாரம் ஆஜராகாத காரணத்தினால் தஷ்வந்திற்கு செங்கல்பட்டு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து புழல் சிறையிலிருந்து அவரை செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர்.

செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல் நடத்தினர் . அவரைச் செருப்பால் அடித்தனர். இதனையடுத்து போலீசார் தஷ்வந்தை மீட்டு கோர்ட்டிற்குள் அழைத்து சென்றனர்.

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக ஆஜராகி வாதாடி வந்த வழக்கறிஞர் விஜயகுமார் விலகினார். தனது வழக்கில் தானே வாதாட இருப்பதாக தஷ்வந்த் நீதிமன்றத்தில் பதில் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜரான தஷ்வந்த், தமக்கு தண்டனை வழங்குமாறு நீதிபதி வேல்முருகனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜராக வரும்போதே தம் மீது மாதர் சங்கத்தினர் தாக்குதல் நடத்தினர் என்று தஷ்வந்த் கூறினார்.

கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட தஷ்வந்த் மீது நீதிமன்ற வளாகத்தில் பெண்கள் தாக்குதல் நடத்தினர் . இதன் video இன்று இணையத்தில் வெளியாகியது .இது தொடர்பான காணொளி .

தஷ்வந்தை டிச.18 வரை காவலில் வைக்க உத்தரவு!

சிறுமி ஹாசினி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கிலும்,தனது தாயை கொலை செய்த வழக்கிலும் கைதான தஸ்வந்தை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்ப்படுத்தினர், பின்னர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், தஷ்வந்தை டிசம்பர் 18ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

BREAKING : பாலியல் – கொலை குற்றவாளி தஷ்வந்த் மீது செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் பெண்கள் செருப்பு வீசி தாக்குதல்!

இரட்டை கொலை குற்றவாளி தஷ்வந்த் மீது பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போரூர் சிறுமி ஹாசினி கொலை வழக்கு மற்றும் தாயை கொலை செய்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தஷ்வந்த் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாரால் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் நடந்து வந்து கொண்டிருந்தபோது போலீஸ் பாதுகாப்பையும் மீறி பெண்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சிலர் இணைந்து தஷ்வந்த் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது பெண்கள் சிலர் காலணிகளை கொண்டு தஷ்வந்தை அடித்தனர்.

தாக்குதலில் இருந்து தஷ்வந்தை மீட்ட காவல்துறையினர், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். இதையடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடி வந்த வக்கீல் விஜயகுமார் விலகினார். தஷ்வந்துக்கு இனி ஆஜராகப்போவதில்லை என்று அவர் கூறினார். இதனையடுத்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜரான தஷ்வந்த், தமக்கு தண்டனை வழங்குமாறு நீதிபதி வேல்முருகனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தனது வழக்கில் தானே வாதாட இருப்பதாகவும் கூறினார். அப்போது நீதிபதி, இலவச சட்ட உதவி மையத்தை அணுகுமாறு கூறினார். மேலும், டிசம்பர் 18ம் தேதி மீண்டும் தஷ்வந்தை ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Facebook Comments