ரூ.200 நோட்டிலும் கள்ள நோட்டு வந்து விட்டது..! இப்படி கண்டுபிடிக்கலாம் !

200 ரூபாய் நோட்டு வெளியானது மட்டும் தான், இன்னும் பலருக்கு 200 ரூபாய் நோட்டு என்ற ஒன்று இருக்கா என்று கூடு கேள்வி கேட்கும் நிலையில் ஜம்மு & காஷ்மீரில் வெள்ளிக்கிழமை 6 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுச் சிக்கியதில் 270 200 ரூபாய் கள்ள நோட்டுகள் சிக்கியுள்ளன.இந்த ரூபாய் நோட்டுகளைச் சித்ராவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அச்சடிக்கப்பட்டு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

200 ரூபாய் சென்ற ஆகஸ்ட் மாதம் ஆசிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட 200 ரூபாய் நோட்டானது இன்னும் பொது மக்களிடம் அதிகளவில் புழக்கத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கைது

ஏற்கனவே ரேயச்சி மாவட்டத்தில் 6000 ரூபாய் மதிப்பு தக்க 500 ரூபாய் நோட்டுகள் 12 சிக்கி அதனைப் பயன்படுத்திய முகமது மக்பூல் என்ற ஒருவரைக் கைத்துச் செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

வழக்குப்பதிவு

கள்ள ரூபாய் நோட்டுகளைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை குழுவானது குல்கம் மாவட்டத்தில் இருந்து ஒருவரை இதற்காகக் கைது செய்து முதல் தகவல் அறிக்கையினையும் பதிவு செய்துள்ளது. இவரை விசார்திததில் சித்ராவில் உள்ள தனது வீட்டில் இருந்து கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டது தெரிய வந்துள்ளது.

மொத்த மதிப்பு

காவல் துறையினர் நடத்திய இந்தச் சோதனையில் 6,30,950ரூபாய் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் பிடிப்பட்டது. அதில் 500 ரூபாய் நோட்டுகள் 1,150-ம், 200 ரூபாய் நோட்டுகள் 270-ம், 50 ரூபாய் நோட்டுகள் 19-ம் பிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் கணினி, பேப்பர் கட் செய்யும் இயந்திரம், போட்டொ காப்பிப் பேப்பர்கள் போன்றவையும் பிடிப்படடுள்ளன.

கடந்த 5 மாதங்களாக இவர்கள் எக்சிக்யூட்டிவ் பேப்பர்களில் இவர்கள் கள்ள நோட்டினை அச்சிடப் பயன்படுத்தியுள்ளனர் என்று பட் கூறினார். கைது செய்யப்பட்ட நபர் ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments