வருகிறது பறக்கும் டாக்ஸி (Video)

தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் மக்களின் பயன்பாட்டுக்காகப் பல்வேறு புதிய சாதனங்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி பல்வேறு நிறுவனங்களும் தானியங்கி முறையில் செயல்படும் வாகனங்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த volocopter நிறுவனம் பறக்கும் டாக்ஸிகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சாலையில் உள்ள வாகன நெரிசலைக் குறைப்பதற்காகவும், வாகனங்களை தரை வழியில் பயன்படுத்த முடியாத குறிப்பட்ட சில இடங்களில் இதைப் பயன்படுத்தும் வகையிலும் இந்தப் புதிய பறக்கும் டாக்ஸி வடிவமைக்கப்பட உள்ளது.

இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் இதன் வடிவமைப்பு முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்காக வெளியாகும் என volocopter நிறுவனத்தின் தலைவர் அலெக்ஸ் ஜோசல் சமீபத்தில் பெர்லினில் நடைபெற்ற டெக் கிரன்ச் விழாவில் தெரிவித்துள்ளார். சுமார் 300 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய அளவுக்கு இந்தப் புதிய வாகனத்தை வடிவமைக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய முயற்சியினால் மக்கள் எந்த அளவுக்குப் பயன்பட போகிறார்கள் என்பது இதன் வெளியீட்டுக்குப் பின்னர்தான் தெரியவரும். அதேபோல் இதைப் பயன்படுத்த மக்கள் எந்த அளவுக்கு ஆர்வம்காட்ட உள்ளனர் என்பதும் இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது.

Total Page Visits: 54 - Today Page Visits: 2