பயணிகளுக்கு கூகிள் மேப்பின் புதிய வசதி

Advertisement

கூகுள் நிறுவனத்தின் மேப் அப்ளிகேஷன் பல்வேறு பயனர்களுக்கு உதவும் வகையில் அவ்வப்போது பல்வேறு சிறப்பம்சங்களைக்கொண்டு அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி பயனர் ஓர் இடத்தில் இருக்கும் வாகன நெரிசலை அறிந்துகொள்வது முதல் ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குச் செல்ல தேவையான எளிய பாதைகளைக் கண்டறிவது வரை இந்த கூகுள் மேப் உதவி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக அதிகம் பயணம் செய்யும் நபர்களுக்காகக் கூகுள் நிறுவனம் புதிய வசதி ஒன்றை கூகுள் மேப்பில் இணைத்துள்ளது. அதன்படி விரைவில் வெளியாக உள்ள புதிய அப்டேட்டில் பயணிகள் பேருந்து அல்லது தொடர்வண்டியில் செல்லும்போது அவர்கள் செல்ல வேண்டிய இடம் வந்ததை அறிந்துகொள்ள புதிய வசதியை இணைக்க உள்ளது. புதிதாக ஓர் இடத்துக்குச் செல்லும் நபர்கள் அந்த இடத்தை எப்போது சென்றடைவோம், சரியான இடத்தில் இறங்க வேண்டும் என்ற அச்சத்துடன் இருப்பது வழக்கமான ஒன்று.

அதைத் தவிர்ப்பதற்காக கூகுள் நிறுவனத்தின் மேப் அப்ளிகேஷனில் நோட்டிஃபிகேஷன் வசதி வழங்கப்பட உள்ளது. இதைப் பயன்படுத்தி பயணி தான் சென்றடைய வேண்டிய இடத்தை குறிப்பிட்ட பின்னர், அந்த இடத்தைச் சென்றடைந்ததும் நோட்டிஃபிகேஷன் மூலம் எச்சரிக்கை கொடுக்கப்படும்.

இதற்கு முன்னர் கூகுள் நிறுவனம் இருசக்கர பயணிகளுக்காகவும், எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தும் நபர்களுக்காகவும் அப்டேட் ஒன்றை வெளியிட்டது. அத்துடன் தற்போது புதிய அப்டேட் ஒன்றையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

இந்த வசதியின் மூலம் பயனர்கள் எந்தவித அச்சமும் இன்றி பயணிக்கலாம்.

Facebook Comments
Total Page Visits: 4 - Today Page Visits: 1