புன்னகையை தேடி வீடியோவாக்கும் கூகுள்

Advertisement

கூகுள் நிறுவனத்தின் கூகுள் போட்டோஸ் என்ற அப்ளிகேஷனில் ஸ்மைல் ஆஃப் 2017 என்ற புதிய வசதியை அந்நிறுவனம் இணைத்துள்ளது.

கூகுள் போட்டோஸ் அப்ளிகேஷன் பெரும்பாலும் அனைத்து ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் தாங்கள் எடுக்கும் புகைப்படங்களை சேமிக்க மொபைலில் இடம் இல்லாத பொழுது இதனை பயன்படுத்தி அவர்களின் போட்டோஸ்களை இணையத்தில் (கிளவ்டு) சேமித்து வைத்துக்கொள்ள முடியும். அதனை அவர்கள் விருப்பத்தின் பொழுது மீண்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனால் மொபைல் தொலைந்து போனாலும், அல்லது ஏதேனும் காரணங்களால் அதில் உள்ள புகைப்படங்களை எடுக்க இயலாமல் போனாலும் இந்த கூகுள் போட்டோஸ் வசதி பயன்படும்.

தற்போது வெளியாகியுள்ள புதிய அப்டேட்டில் பயனரின் புன்னகைத்த முகத்தை மட்டும் வைத்து வீடியோ பதிவினை உருவாக்க வழிவகை செய்துள்ளது கூகுள் நிறுவனம். அதன்படி பயனர்கள் இந்த ஸ்மைல் ஆஃப் 2017 வசதியை இயக்கி வீடியோவை உருவாக்கத் தொடங்கியதும், பயனர்களில் புன்னகை நிறைந்த புகைப்படங்களை மட்டும் தேடித் தருகிறது. அதனை வீடியோவாகவும் மாற்றம் செய்து வைத்துக்கொள்ளவும் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

Facebook Comments
Total Page Visits: 6 - Today Page Visits: 1