சிறீலங்காவில் வரும் வாரம் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை

வட-கிழக்கு பருவமழை அடுத்தவாரம் சிறிலங்காவைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்காவின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட-கிழக்குப் பருவமழைக்குத் தேவையான சூழ்நிலைகள் அவதானிக்கப்பட்டு வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இன்று அல்லது நாளை இதற்கான சூழல் வலுப்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு,வடமத்திய, வடமேல் மாகாணங்களில் உள்ள குளங்கள் வடகிழக்கு பருவமழையின் மூலமே நீரைப் பெறுவது வழக்கமாகும்.

Facebook Comments