மனைவியின் கல்லறையில் தற்கொலை செய்துகொண்ட கணவன்! ஏன் தெரியுமா?

Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு பட்டம் சுமத்தியதில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சோகம் தாங்க முடியாமல் கணவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்- வசந்தி தம்பதியினருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். வசந்தி அருகில் உள்ள சூப்பர்மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.

திருட்டு பட்டம்

குமரி மாவட்டம் தக்கலை அருகே கொல்லன்விளை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர் தனது மனைவி வசந்தி (31) மற்றும்2 மகளுடன் அருமனை அருகே கடையாலுமூடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். வசந்தி அந்த பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு சென்றார். இந்த நிலையில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் வீட்டில் நகையை காண வில்லை என கூறி வசந்தி மீது சந்தேகம் அடைந்து அவர் மீது திருட்டு பட்டம் சுமத்தினர். இது குறித்து தனது கணவரிடம் கூறி, வசந்தி வேதனை அடைந்தார்.இதையடுத்து வேலைக்கு செல்ல வேண்டாம் என மணிகண்டன் கூறி விட்டார்.

தற்கொலை

இருப்பினும் வேதனை அடைந்த வசந்தி கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன் இரு பக்க கடிதமும் எழுதி வைத்து இருந்தார். இதன் அடிப்படையில் கடையாலுமூடு போலீசார் விசாரணை நடத்தி, சூப்பர் மார்க்கெட் உரிமையாளரின் மனைவி சுகிலா மீது வழக்குப்பதிவு செய்தனர்.தற்கொலை செய்து ெகாண்ட வசந்தியின் உடல், தக்கலை கீழகல்குறிச்சியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.

மணிகண்டன் தற்கொலை

மனைவி இறந்த நாளில் இருந்து மணிகண்டன் மிகவும் சோகத்துடன் இருந்தார். என் மனைவி சென்ற இடத்துக்கே நான் செல்ல போகிறேன். அவள் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்து பார்க்க முடிய வில்லை. நான் இந்த உலகில் வாழ்ந்து என்ன பயன் கூறி நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கதறி அழுதார். அவர்கள் மணிகண்டனுக்கு ஆறுதல் கூறி வந்தனர். இதற்கிடையே நேற்று இரவு கீழகல்குறிச்சியில் உள்ள தனது மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு மணிகண்டன் வந்தார். இரவு நீண்ட நேரமாக தூங்காமல் அங்கும், இங்கும் அலைந்தவாறு இருந்தார். பின்னர் திடீரென அவரை காண வில்லை.

வசந்தியின் கல்லறையில் மணிகண்டன்

இந்த நிலையில் இன்று காலை வசந்தியின் கல்லறையில் மணிகண்டன் மயங்கி கிடந்தார். அவரது வாயில் நுரை தள்ளி இருந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் மணிகண்டனை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனையில் மணிகண்டன் இறந்தது தெரிய வந்தது. மனைவி இறந்த சோகத்தில் இருந்த மணிகண்டன், அவரது கல்லறையில் வைத்தே விஷம் குடித்து இறந்துள்ளார்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்ததும் தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி இறந்து சுமார் 1 மாதம் கூட ஆகாத நிலையில் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனைவியின் கல்லறையிலேயே தற்கொலை செய்து கொண்ட கணவன்: நடந்தது என்ன? video

Facebook Comments