இந்திய இராணுவத்தை உளவு பார்க்கிறதா ரூ கோலர்?

இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் உள்ள குறிப்பிட்ட சில அப்ளிகேஷன்களால் தகவல்கள் பிற நாடுகளால் திருடப்படுவதாக இந்தியன் பாதுகாப்புத் துறையால் தெரிவிக்கப்பட்டது.

அதனால் ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் உள்ள சீன நிறுவனத்தின் சுமார் 40 அப்ளிகேஷன்களை நீக்கம் செய்து மொபைல்களை முழுவதும் ரீ-செட் செய்ய வேண்டும் என தகவல் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

சில அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி பிற நாடுகள் உளவு வேலை செய்து வருவதாகவும், அதனைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுப்பதாகவும் தகவல் பாதுகாப்புத் துறை அறிவித்தது. அதற்காக பாதிக்கக்கூடிய அப்ளிகேஷன்கள் பட்டியலை இந்தியாவின் தகவல் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டது. அதில் வீ சாட், ட்ரூகாலர், வீபோ, யூசி ப்ரவுசர் மற்றும் யூசி நியூஸ் போன்ற அப்ளிகேஷன்களைக் குறிப்பிட்டிருந்தது. ட்ரூகாலர் அப்ளிகேஷனையும் பாதுகாப்பற்ற அப்ளிகேஷன் என தெரிவித்ததையடுத்து அதற்கு மறுப்பு தெரிவித்து ட்ரூகாலர் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிவிட்டுள்ளது.

அதில் ட்ரூகாலர் ஸ்வீடன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த அப்ளிகேஷனை பாதுகாப்பற்றது என குறிப்பிட்டுள்ளனர் என எங்களுக்குப் புரியவில்லை. இதுகுறித்து நாங்களும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இது உளவு பார்க்கும் அப்ளிகேஷன் கிடையாது. ட்ரூகாலரில் வழங்கப்பட்டுள்ள வசதிகள் அனைத்து பயனர்களின் உத்தரவு பெற்ற பின்னரே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Total Page Visits: 167 - Today Page Visits: 2