ஐயோ இந்த நிலையையா? : ஜான்சன் & ஜான்சனால் வந்த புற்று நோய் ! உங்க குழந்தைகள் கவனம் !

Advertisement

நம் நாட்டைப் பொறுத்த வரை இங்குள்ள மக்களின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கும் நோக்கில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் தடை செய்யப்பட்டு கொஞ்ச வாரங்களில் மறு படியும் விற்கப்படுவது சகஜமான விஷய மாகி விட்டது..அதிலும் ஜனங்களின் உயிரோடு விளையாடும் பல பொருட்களை இந்தியாவெங்கும் உள்ள கடை களில் தாராளமாகக் கிடைக்கின்றன. சாம்பிளுக்கு சொல்வதானால்.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் முகப்பவுடரை பயன்படுத்தியதால், கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு 417 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க அந்த நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தனது நிறுவனம் சார்ந்த பொருட்கள் மூலம் ஏற்படும் புற்றுநோய் அபாயங்கள் குறித்து போதுமான எச்சரிக்கையினை ஜான்சன் & ஜான்சன் தரவில்லை என பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், கலிஃபோர்னியா நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பில்தான் அதிகபட்ச இழப்பீடு விதிக்கப்பட்டுள்ளது.

முந்தைய வழக்குகளில் மேல் முறையீடு செய்தது போலவே இந்த வழக்கிலும் மேல் முறையீடு செய்ய ஜான்சன் & ஜான்சன் திட்டமிட்டுள்ளது.அறிவியலை எங்கள் நிறுவனம் பின்பற்றுவதால், தற்போதைய தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளோம்“ என ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தில் செய்தி தொடர்பாளர் கரோல் குட்ரிச் கூறியுள்ளார்.

ஜான்சன் & ஜான்சன் பொருட்களை பயன்படுத்திய பிறகு தங்களுக்குப் புற்றுநோய் வந்ததாக ஆயிரக்கணக்கான பெண்களின் குற்றச்சாட்டை இந்நிறுவனம் எதிர்கொள்கிறது. புற்றுநோய் குறித்து ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் எதிர்கொண்ட நான்கு வழக்குகளில், மூன்றில் தோல்வியடைந்தது. இதனால் 300 மில்லியன் டாலர்களை இந்நிறுவனம் அபராதமாக செலுத்தியுள்ளது.

கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கை 63 வயதான எவா எச்செவேர்ரியா கொண்டு வந்தார். தனது 11-ஆம் வயது முதல் அவர், ஜான்சன் & ஜான்சன் குழந்தை பவுடரை பயன்படுத்தி வந்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்குக் கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. முகப்பவுடரால் புற்றுநோய் ஆபத்து இருப்பதை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிந்திருந்த போதிலும், அத்தகவலை மக்களிடம் இருந்து மறைந்துள்ளனர் என நீதிமன்றம் கூறியுள்ளது.

முகப்பவுடருக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு உண்டா?

ஜான்சன் & ஜான்சன் பொருட்களை பயன்படுத்திய பிறகு தங்களுக்குப் புற்றுநோய் வந்ததாக ஆயிரக்கணக்கான பெண்களின் குற்றச்சாட்டை இந்நிறுவனம் எதிர்கொள்கிறது.புற்றுநோய் குறித்து ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் எதிர்கொண்ட நான்கு வழக்குகளில், மூன்றில் தோல்வியடைந்தது. இதனால் 300 மில்லியன் டாலர்களை இந்நிறுவனம் அபராதமாக செலுத்தியுள்ளது.

கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கை 63 வயதான எவா எச்செவேர்ரியா கொண்டு வந்தார். தனது 11-ஆம் வயது முதல் அவர், ஜான்சன் & ஜான்சன் குழந்தை பவுடரை பயன்படுத்தி வந்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்குக் கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

முகப்பவுடரால் புற்றுநோய் ஆபத்து இருப்பதை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிந்திருந்த போதிலும், அத்தகவலை மக்களிடம் இருந்து மறைந்துள்ளனர் என நீதிமன்றம் கூறியுள்ளது.

முந்தைய வழக்குகளில் மேல் முறையீடு செய்தது போலவே இந்த வழக்கிலும் மேல் முறையீடு செய்ய ஜான்சன் & ஜான்சன் திட்டமிட்டுள்ளது.“அறிவியலை எங்கள் நிறுவனம் பின்பற்றுவதால், தற்போதைய தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளோம்“ என ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தில் செய்தி தொடர்பாளர் கரோல் குட்ரிச் கூறியுள்ளார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரை நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளத்தை அந்நிறுவம் முன்னெச்சரிக்கையாக அறிவிப்பதை தவிர்த்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ செலவு மற்றும் அபராதத்தொகையாக 2600 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தினுடைய பேபி பவுடர் மற்றும் இதர தயாரிப்புகளும் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்கிறது என்று நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் இதுவரை 1,500க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு 4வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த ஆண்டும் கலிபோர்னியாவை சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ரூ.467 கோடி இழப்பீடு வழங்க செயின்ட் லூயிஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments
Total Page Visits: 4 - Today Page Visits: 1