சிதைப்பின் தொடக்கம்: தாவரவியல் பூங்காவானது துயிலுமில்லம்

Advertisement

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் தாவரவியல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலுள்ள தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் உத்தரவுக்கு அமையவே கரைச்சிப் பிரதேச சபையினால் தாரவியல் பூங்கா எனும் பெயர்ப்பலகை அங்கு நாட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்றில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காக்களாக மாற்றுவோம் என சபதம் செய்திருந்தார்.

கடந்த வருடம் இறுகிய முகத்தொடு குறித்த துயிலுமில்லத்தில் அவர் பொதுச்சுடர் ஏற்றியிருந்தார். மாவீரர் பெற்றோர்களுக்கே பொதுச்சுடர் ஏற்றத் தகுதி இருக்கிறது என்றும் இவருக்கு பொதுச்சுடர் ஏற்ற என்ன தகுதி இருக்கிறது என்றும் மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகள் தோற்றம்பெற்றிருந்தன.

இந்நிலையில் இவ்வருடம் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் குறித்த அரசியல்வாதி பொதுச்சுடர் ஏற்றமுடியாத நிலை ஏற்படுத்தப்பட்டதோடு ஆயிரக்கணக்கான மக்களும் கனகபுரம் துயிலுமில்லத்தில் திரண்டிருந்தனர்.

இந்நிலையில் மாவீரர் தினம் முடிந்த கையோடு குறித்த அரசியல்வாதியில் ஏற்பாட்டில் அவசர அவசரமாக மாவீரர் துயிமில்லம் தாவரவியல் பூங்காவாக மாற்றப்பட்டு பெயர்ப்பலகை நாட்டப்பட்டுள்ளது.

Facebook Comments
Total Page Visits: 7 - Today Page Visits: 4