அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் ’மன்னர் வகையறா’ டீசர்!

Advertisement

’தேவதையை கண்டேன்’, ’திருவிளையாடல் ஆரம்பம்’, ’பட்டத்து யானை’ போன்ற படங்களை இயக்கிய பூபதிபாண்டியனின் அடுத்த படம் ‘மன்னர் வகையறா’. நடிகர் விமல், ரோபோ ஷங்கர், கயல் ஆனந்தி, பிரபு, சரண்யா என பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் இறுதிக் கட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

குடும்பப் படங்களில் நடித்து வந்த விமல் இந்தப் படத்தில் ஆக்‌ஷன் களத்தில் குதித்துள்ளார். காமெடி, ஆக்‌ஷன் எனக் கலந்து உருவாகிவரும் இந்தப் படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். ரோபோ ஷங்கர் மாரி தனுஷ் கெட்டப்பில் வந்து காமெடி அதகளம் செய்கிறார்.

பூபதி பாண்டியன் இயக்கியுள்ள ‘மன்னர் வகையறா’ படத்துக்கு, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘துருவங்கள் 16’ படத்துக்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜோய் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விமல் தயாரிப்பில், ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகவிருக்கிறது. தற்போது இதன் டீசர் வெளியாகியுள்ளது.

அதிரடி ஆக்‌ஷனில் விமல், மாரி கெட்டப்பில் ரோபோ ஷங்கர்; மிரட்டும் ’மன்னர் வகையறா’ பட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின …

Facebook Comments
Total Page Visits: 2 - Today Page Visits: 1