பல உயிர்களை பழிவாங்கிய கொதிக்கும் ஆசிட் குளம்! அதிர்ச்சி வீடியோ !

மியில் அதிசயங்களுக்கும் ஆச்சர்யங்களுக்கும் அளவு கிடையாது. இயற்கை தன்னுள் ஏராளமான மர்மங்களைக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று தான் ஆசிட் குளம்.இந்த ஆசிட் குளம் சுற்றுலாத் தளமாக விளங்குகிறது என்றால் நம்புவீர்களா?

ஆம். நியூயார்க் நகரில் உள்ள பிரபலமான பூங்கா ஒன்றின் பெயர் யெல்லோ ஸ்டோன் என்பதாகும். இங்கு தான் ஆசிட் குளம் உள்ளது.

இந்த பூங்கா 15 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது.

இங்கு பனிகளால் சூழப்பட்ட காடுகளும் உண்டு. இங்கு ஜனவரி மாதத்தில் வெறும் 9 டிகிரி மட்டுமே வெப்பநிலை இருக்குமாம். ஆனால் ஜூலை மாதத்தில் 80 டிகிரியில் வெப்பம் தகிக்குமாம்.

மிக நீண்ட இரும்புப் பாலம் ஒன்று அமைக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்குளத்தில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி எட்டிப் பார்த்து சிலர் உயிரிழந்த சம்பவங்களும் உண்டு.

சமீபத்தில் கூட காலின் என்ற 23 வயதே ஆன இளைஞர் தன்னுடைய சகோதரியுடன் பூங்காவுக்கு சென்ற போது, ஆர்வத்தில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி, எட்டிப் பார்த்த போது தவறி விழுந்துவிட்டார்.

நீரில் மூழ்கி இறந்துபோன அவருடைய உடல், குளம் குளிர்ந்த வெப்பநிலைக்கு வந்த பின்பு, தேடப்பட்டது. ஆனால் உடல் கண்டுபிடிக்கவே முடியவில்லை. குளத்தில் இருக்கும் அமிலத் தன்மையால் அவருடைய உடல் கரைந்து போனதாகப் பூங்கா நிர்வாகம் அறிவித்தது.

2002 – ஆம் ஆண்டு அங்கு வெப்பநிலை 99 டிகிரியை எட்டியுள்ளது. கோடைகாலத்தில் 1933 ஆம் ஆண்டு தான் 66 டிகிரி வெப்பநிலை இருந்திருக்கிறது. இது தான் கோடை காலத்தில் அங்கு நிலவும் வெப்பநிலையில் மிகக் குறைவான அளவாக இருந்திருக்கிறது.

இந்த குளமானது காலநிலைக்கு ஏற்ப, நிறமும் மாற்றமடைகிறது. வசந்த காலங்களில் இங்கு வெந்நிறப் புகை சூழ்ந்தும் காணப்படும். கோடை காலம் தொடங்கியதும் நீலமும் மஞ்சளும் சேர்ந்து, மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்திலும் தீப்பிழம்போடும் புகையோடும் வண்ண மயமாகக் காட்சியளிக்கிறது.

இது தொடர்பான வீடியோவை நீங்கள் பார்க்கலாம் .

Total Page Visits: 65 - Today Page Visits: 4