கடும் பனியில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மக்கள் !

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் மோசமான குளிரான காலநிலை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த குளிர்கால நிலையை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் கனடாவின் பெருமளவிலான பகுதிகளில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நகரங்கள் வெள்ளைக்கம்பளம்

அமெரிக்கா மற்றும் கனடாவில் கொட்டும் பனியினால் நகரங்கள் வெள்ளைக்கம்பளம் போர்த்தப்பட்டிருப்பது போன்று காணப்படுகிறது.அமெரிக்காவின் மினசோட்டா நகரில் மைனஸ் 38 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் அங்கு கொதி நீர் கூட பொது வெளியில் நேரதாமதமின்றி பனிக்கட்டியாக மாறிவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனி மழை

இதுதொடர்பான காணொளிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.பென்சில்வேனியாவின் எரீ நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து பனி மழை பொழிந்து வருகிறது.இதனால் அங்குள்ள வீதிகளில் 5 அடி உயரம் வரை பனி கொட்டிக் கிடக்கிறதாகவும், இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் வெளிவந்த வீடியோ இணைப்பு

இந்த நிலையில் கொட்டிக் கிடக்கும் பனியை அகற்றும் பணிகளை அந்நாட்டு தேசிய பாதுகாப்பு படையினர் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, இந்த கடும் குளிரினால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளதுடன், அண்டார்டிக்காவிலிருந்து அமெரிக்காவின் தென்பகுதியை நோக்கி கடும் குளிர் காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

50 வருடங்களுக்கு பின்னர் கனடாவில் அதி தீவிர குளிர்!

கனடாவில் நேற்று(28) வியாழக்கிழமை காலை வரலாறு காணாத அதி தீவிர குளிர் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த 50 வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான குளிர் நிலவியதாக அந்நாட்டு காலநிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

வீடியோ இணைப்பு

கனடிய காலநிலை மையம் எச்சரிக்கை

ரொறொன்ரோ மற்றும் கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று(29) 22.9 குறைந்த வெப்பநிலை நிலவுகின்றது. இதனால் அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதற்கு முன்னதாக கடந்த 1960 ஆம் ஆண்டில் இதுபோன்று 18.9 என்ற குறைந்த வெப்பநிலை நிலவியதாக கனடிய காலநிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வீதி விபத்துக்கள்

இதேவேளை, வீதியில் பலத்த காற்று மற்றும் உறைபனியினாலும் ஆபத்து ஏற்படலாம் என வாகன சாரதிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.மேலும், இந்த காலநிலையால் பாதிக்கப்படக்கூடிய குடும்பம், நண்பர்கள் மற்றும் அயலவர்களையும் வீட்டு செல்லப்பிராணிகளையும் கவனத்தில்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளிற்கு கனடா சுற்று சூழல் அமைப்பு தொடர் குளிர் காலநிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

AppleMark

Brutal cold spell sets record lows across the US

Facebook Comments