இணையத்தில் செம வைரலான ஆத்விக் அஜித் (Photos)

விவேகம் படத்தை அடுத்து அஜித் அடுத்ததாக சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ‘விஸ்வாசம்’ என்று பெயர் வைத்துள்ள இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கான அலுவலக பூஜை நேற்று போடப்பட்டது.

இந்த படத்தில் அஜித், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்து மாறி இளமை தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இதில் கருப்பு முடியுடன் அஜித் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி அவரது தோற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.

அஜித் தன்னுடைய மகன் ஆத்விக் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதனால், அஜித் அந்த பள்ளிக்கு சென்றுள்ளார். அவர் மகனை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. ஆத்விக் மைதானத்தில் ஓடும்போது எடுத்த புகைப்படமும், அஜித் பெற்றோருடன் பெற்றோராக சேர்ந்து நிற்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

இந்த புகைப்படங்களில் அஜித், வித்தியாசமான ஹார் ஸ்டைலில் இருக்கும் தோற்றம் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கிறது.

Facebook Comments