உங்கள் இன்றைய ராசி பலன்-11/12/2017

Subscribe to our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

அழுத்தத்தை விரட்டிட குழந்தைகளுடன் மதிப்பு மிக்க நேரத்தை செலவிடுங்கள். குழந்தைகளின் குணமாக்கும் சக்தியை நீங்கள் அனுபவிப்பீர்கள். அவர்கள்தான் பூமியில் அதிக சக்திவாய்ந்த ஆன்மிக மற்றும் உணர்வுப்பூர்வமானவர்கள். புத்துணர்வு பெற்றதை நீங்களே உணர்வீர்கள். பிசினஸ் கிரெடிட் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். குடும்ப டென்சன் உங்கள் பிரச்சினைகளை திசைதிருப்பிவிடக் கூடாது. கெட்ட நேரம் அதிகமாக பாதிக்கும். சுய பரிதாபத்தில் நேரத்தை வீணடிக்காமல், வாழ்க்கை பாடங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ரொமாண்டிக் எண்ணங்களை வெளிப்படுத்தாதீர்கள். நீங்கள் நேரடியாக பதில்கள் தராவிட்டால் உடன் பணிபுரிபவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். இன்று முக்கியமான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் துணையிடம் வேறு ஒருவர் அதிக அக்கரை எடுக்க கூடும். ஆனால் இறுதியாக அவர்களுக்குள் தவறாக எந்த விஷயமும் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

 

ரிஷபம் ராசிபலன்:

உணவுக்கு உப்பு சுவை சேர்ப்பதைப் போல – சில மகிழ்ச்சிக் குறைபாடுகளும் தேவை. அப்போதுதான் மகிழ்ச்சியின் மதிப்பை நீங்கள் உணர்வீர்கள். வருங்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய இடத்தில் உங்கள் கூடுதல் பணத்தை பத்திரமாக சேமித்திடுங்கள். உங்களை நேசிக்கும், உங்கள் மீது அக்கறை காட்டும் நபர்களுடன் சிறிது நேரம் செலவழியுங்கள். திடீரென ரொமாண்டிக் அனுபவம் இன்று எதிர்பாராமல் கிடைக்கும். புதிய திட்டங்கள் வரலாம். ஆனால் அவசரமாக முடிவு எடுப்பது புத்திசாலித்தனமல்ல. ‘உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். உங்கள் துணையுடன் திருமண பந்தத்தில் இணைந்த்தை உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக இன்று எண்ணுவீர்கள்.

 

மிதுனம் ராசிபலன்:

நீண்டகால நோயை எதிர்த்துப் போராடும்போது தன்னம்பிக்கைதான் ஹீரோயிசத்தின் சாராம்சம் என்பதை உணர்ந்திடுங்கள். சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். உங்கள் துணைவரிடம் ரகசிய தகவலை பகிர்ந்து கொள்ளுமுன் யோசியுங்கள். முடிந்தால் அதைத் தவிர்க்கப் பாருங்கள். அவர் வேறு யாரிடமாவது அதை சொல்லக் கூடும். இன்று உங்கள் வாழ்வில் உண்மையான காதலை இழப்பீர்கள். கவலைப்படாதீர்கள். எல்லாமே காலப்போக்கில் மாறும். உங்கள் காதல் வாழ்வும்தான். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை இன்று ஆபீசில் புத்துணர்சியுடன் செயல்படுவீர்கள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்கள் திருமண வாழ்வில் ஒரு வித சலிப்பு ஏற்படும். நீங்கள் அதை சரி செய்ய இருவரும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும்.

 

கடகம் ராசிபலன்:

எதிர்காலம் பற்றிய தேவையற்ற கவலை உங்கள் மனநிலையை பாதிக்கும். ஏக்கத்துடன் எதிர்காலத்தை சார்ந்திருப்பதைவிட, இப்போதைய நேரத்தை அனுபவிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் அதற்கான அற்புதம் உண்டு, இருளுக்கும், அமைதிக்கும் கூட. சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் – ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். மற்றவர்களை காயப்படுத்தாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப மாறிக் கொள்ளுங்கள். ஒருதலை காதலில் நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்கள் உடன் பணிபுரிபவர்கள் இன்று சிறிது மரியாதை குறைவுடன் நடந்து கொள்வது போல உங்களுக்கு தோன்றலாம். புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் உங்கள் துணைவர்/துணைவி பற்றி குறை கூற வேண்டாம். ஏற்கனவே அவர் மோசமான மன நிலையில் உள்ளார்.

 

சிம்மம் ராசிபலன்:

உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் – ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். உங்கள் கருத்தை சரியாகக் கூறாத காரணத்தால் பெற்றோர் உங்களை தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும். கருத்தை சரியாகத் தெரிவிப்பதை உறுதி செய்யுங்கள். இன்று உங்கள் காதல் ஒரு புதிய உச்சத்தை தொடும். இந்த நாள் உங்கல் காதலின் புன்சிரிப்பில் தொடங்கி உங்கள் இருவரின் இன்ப கனவுகளில் முடியும். வேலை நேரத்தில் சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிட்டால் இன்று சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் இனிமையான மாலை பொழுதை செலவிடுவீர்கள்.

 

கன்னி ராசிபலன்:

யூகிக்க முடியாத உங்களின் இயல்பு, திருமண உறவை பாதிக்காமல் இருக்கட்டும். இதைத் தவிர்ப்பதை உறுதி செய்யுங்கள். இல்லாவிட்டால் பின்னர் வருத்தப்படுவீர்கள். நுட்பங்களை சரியாகக் கையாண்டால் இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள். உங்கள் தாராள இயல்பை நண்பர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காதீர்கள். உங்கள் இதயத்தை ரொமான்ஸ் ஆக்கிரமித்திருக்கும். தொழிலில் நிபுணத்துவத்துக்கு சோதனை ஏற்படும். விரும்பிய ரிசல்ட்டைப் பெறுவதற்கு, முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். பேசும்போது ஒரிஜினலாக இருங்கள், நடிப்பதால் எதுவும் கிடைக்காது. இன்று, உங்கள் துணையுடன் இன்பமாக மாலை பொழுதை கழிப்பீர்கள்.

 

துலாம் ராசிபலன்:

உடலை கட்டுக்கோப்பாகவும் மனதை நன்றாகவும் வைக்க யோகாவும் தியானமும் உதவும். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். மிக்க மகிழ்ச்சியான செய்திகளை பிள்ளைகள் கொண்டு வரலாம். உங்கள் அன்புக்குரியவருக்கானது போட்டி வரும்போது வேலைக்கான அட்டவணை கடுமையாக இருக்கும். சுற்றுலா மற்றும் பயணம் ஆனந்தத்தைத் தரும். அது கல்வி கற்பிப்பதாகவும் இருக்கும். அவர்/அவளின் பிறந்த நாளை மறத்தல் போன்ற விஷயத்துக்காக உங்கள் மேல் கோபத்தில் இருக்கலாம். ஆனால் மாலையில் அந்த ஊடல் மறையும்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

கடந்த காலத்தைய மோசமான முடிவுகள் இன்று உங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் – நீங்கள் ஆதரவின்றி நிற்பதாக, அடுத்து என்ன முடிவெடுக்க முடியாதவராக இருப்பீர்கள் – மற்றவர்களின் உதவியை நாடுங்கள். நகைச்சுவைகளின் அடிப்படையில் ஹேஸ்யத்தில் ஈடுபடாதீர்கள். டென்சன் இருக்கும். ஆனால் குடும்ப ஆதரவு உதவியாக அமையும். உங்களை மகிழ்விக்கும் செயல்களை உங்கள் அன்புக்குரியவர் செய்வார். உங்கள் சீனியர்கள் நீங்கள் கூறும் கருத்தினை இன்று புரிந்து கொள்ள முடியாமல் போகலாம்.. எனவே பொறுமயுடன் அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்யவும். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. நீங்கள் இன்று எடுக்கும் ஒரு சிறிய முயற்சி உங்கள் திருமண வாழ்வை மேலும் அழகாக்கும்.

 

தனுசு ராசிபலன்:

இன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். உடல் நலமின்றி இருக்கும் உறவினரை போய்ப் பாருங்கள். புலன்களின் எல்லையை தாண்டியது காதல். ஆனால் இன்று உங்கள் புலங்கள் அனைத்தும் காதல் அனுபவத்தை உணரும் நாள். ஏமாற்றப்படாமல் இருக்க பிசினஸில் விழிப்பாக இருக்கவும். இந்த நாளை சிறப்பானதாக்க, மறைந்திருக்கும் தகுதிகளை பயன்படுத்துவீர்கள். இன்று உங்கள் துணை ஒரு ஸ்பெஷலான பரிசை உங்களுக்கு அளிப்பார்.

 

மகரம் ராசிபலன்:

மகிழ்ச்சியான செய்தி கிடைக்கலாம். முதலீடுகள் செய்து ஊகங்களுக்குப் போக இது நல்ல நாள் அல்ல. மனைவியுடன் பிக்னிக் செல்ல மிக நல்ல நாள். அது உங்கள் மனநிலையை மாற்றுவது மட்டுமின்றி, தவறான புரிதலை சரி செய்யவும் உதவும். இன்று, உங்கள் அன்புக்குரியவர் உங்களை நேசிக்கிறார் என்பதை உணர்வீர்கள். இன்று, உங்கள் பாஸ் ஏன் உங்களிடம் கண்டிப்பாக நடந்து கொள்கிறார் என்ற உண்மையை நீங்கள் உணர்ந்து அதனால் மகிழ்ச்சி கொள்வீர்கள். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். உங்களுக்கும், துணைவருக்கும் இடையில் பிரச்சினை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அது உங்கள் நீண்டகால உறவுக்கு நல்லதாக இருக்காது.

 

கும்பம் ராசிபலன்:

கடினமான வேலை இருப்பதால் சட்டென கோபம் வரும். பெரிய குழுவில் ஈடுபாடு கொள்வது அதிக பொழுதுபோக்காக அமையும் – ஆனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். மனைவியின் சாதனையைப் பாராட்டி, அவருடைய வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்தில் மகிழ்ந்திடுங்கள். பாராட்டுவதில் தாராளமாக சின்சியராக இருங்கள். மூன்றாம் நபரின் தலையீட்டால் உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவருக்கும் இடையில் உரசல் ஏற்படும். வேலையில் சிறப்பாக பணியாற்றியமைக்கு இன்று நீங்கள் இன்று எல்லோராலும் கவனிக்கப்படுவீர்கள். இன்று மனதை சோதித்துப் பார்ப்பீர்கள் – சிலர் செஸ், குறுக்கெழுத்து விளையாடுவீர்கள்.- மற்றவர்கள் கதை- கவிதை எழுதுவீர்கள் அல்லது எதிர்கால திட்டங்களை தயாரிப்பீர்கள். ஒரு உறவினர், நன்பர் அல்லது அண்டை வீட்டாரால் இன்று உங்கள் திருமண வாழ்வில் டென்ஷன் ஏற்பட கூடும்.

 

மீனம் ராசிபலன்:

உடல் நோயில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் விளையாட்டுப் போட்டியில் நீங்கள் பங்கேற்க முடியும். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். கற்பனைகளில் வேகம் காட்டாதீர்கள். யதார்த்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள் – நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள் – அது உங்களுக்கு நல்லதை செய்யும். இலையுதிர்காலத்தில் மரத்தில் இருந்து விழும் இலையைப் போன்றது உங்களின் காதல் வாழ்க்கை. இன்று வேலை நேரத்தில் சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிட்டால் வேலையில் ஒரு தவறு நிகழக்கூடும். தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும். உங்கள் துணையின் கண்டிப்பான பேச்சால் இன்று நீங்கள் வருத்தப்படுவீர்கள்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

§

Facebook Comments