உங்கள் இன்றைய ராசி பலன்-26/12/2017

Advertisement

Subscribe to our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

முடியுமானால் நீண்டதூர பயணத்தை தவிர்த்திடுங்கள். நீங்கள் பலவீனமாக இருப்பதால், பயணம் மேலும் பலவீனத்தை ஏற்படுத்தும். நீண்டகாலம் நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் பில்களை சவுகரியமாக செலுத்தும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். இன்று கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி குடும்பத்தினருடன் அன்பாக செலவிடுங்கள். அன்புக்குரியவருடன் இனிப்புகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இன்று புதிய பார்ட்னர்ஷிப்கள் நம்பிக்கையானதாக அமையலாம். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். காதலின் முழுமையான இன்பத்தை இன்று நீங்கள் அடைவீர்கள்.

 

ரிஷபம் ராசிபலன்:

உங்கள் பிள்ளை தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியாவிட்டால் திட்டாதீர்கள். அடுத்த முறை நன்றாக எழுதுமாறு ஊக்கம் கொடுங்கள். எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். பொழுபோக்கு மற்றும் ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். சிக்கனமாக செலவு செய்யும் குணத்தை மற்றவர்கள் குற்றம் சொல்வார்கள். எதிர்காலத்துக்காக நீங்கள் சேமிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களை பிரச்சினையில் விட்டுவிடும். உங்கள் மனதிற்கினியவரை சந்திப்பீர்கள் என்பதால் மனதில் ரொமான்ஸ்தான் ஆக்கிரமித்திருக்கும். இந்த நாள் உங்களுக்கு ரோஜாக்களின் நறுமணத்தை வழங்கும். காதலின் அற்புதத்தை உணர்ந்து மகிழுங்கள். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்கள் துணை மேலும் அதிகமாக உங்கள் காதல் வசப்பட வைக்க செய்வார்கள்.

 

மிதுனம் ராசிபலன்:

மத உணர்வுகள் தோன்றி, புனிதமானவரிடம் இருந்து தெய்வீக அறிவைப் பெற வழிபாட்டு இடத்திற்குச் செல்வீர்கள். நீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வரலாம் – அது உங்களை நெருக்கமான தொடர்புகள் மற்றும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களுடன் இருக்கச் செய்யும். உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து அழைப்பு வரும் என்பதால் அருமையான நாள். புதிய முயற்சிகள் தேடி வரும், நல்ல லாபத்திற்கு உத்தரவாதம் தரும். இன்றைக்கு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாதீர்கள். உங்கள் துணையுடன் நேரம் செலவிடும் மிக சிறந்த நாளாக இன்று அமையும்.

 

கடகம் ராசிபலன்:

இன்று உங்களுக்கு நிறைய நேரம் இருக்கும். எனவே உங்கள் ஆரோக்கியத்துக்காக நீண்ட தூரம் வாக்கிங் செல்லுங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளுடன் ஆரோக்கியமான உறவை ஊக்குவித்திடுங்கள். கடந்த காலத்தை மறந்திடுங்கள். பிரகாசமான மகிழ்ச்சியான எதிர்காலத்தைக் காணுங்கள். உங்கள் முயற்சிக்குப் பலன் கிடைக்கும். உங்கள் அன்புக்குரியவரின் கைகளில் சவுகரியம் – ஆனந்தம் உச்சகட்ட உற்சாகத்தைக் காண்பதால் – உங்கள் வேலை பின்னுக்குத் தள்ளப்படும். உத்வேகம், நம்பிக்கையுள்ளவர்களுடன் பார்ட்னர்ஷிப் சேருங்கள். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். உங்கள் களிப்பான திருமண வாழ்வில் இன்று மிக அழகான நாள்.

 

சிம்மம் ராசிபலன்:

தாமதமாக ஓவர்டைம் வேலை பார்க்கும் சிலர், சக்தி குறைந்திருப்பீர்கள் – இன்று கடைசியாக உங்களுக்கு இருப்பது ஊசலாட்டமும் அழுத்தம் நிறைந்த நாளும்தான். பல்வேறு வழிகளில் பண வரவு இருக்கும். நண்பர்களுடனும் புதியவர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் காதலுக்கு உரியவரின் கமெண்ட்களால் உணர்ச்சிவயப்படுவீர்கள்- உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். நிலைமையை மோசமாக்கும் வகையில், எதையாவது செய்துவிடாதீர்கள். வேலையில் இன்று மிக அருமையான நாளாகவே இருக்கும். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். தேவையில்லாத காரணத்துக்காக இண்ரு உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படும்.

 

கன்னி ராசிபலன்:

சமீபத்திய நிகழ்வுகளால் மனம் பாதிக்கப்படும். தியானமும் யோகாவும் ஆன்மிக மற்றும் உடல்சார்ந்த ஆதாயங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். இந்த நாளை கவனமாக தி்ட்டமிடுங்கள் – உங்களுக்கு நம்பகமானவர்களுடன் பேசி உதவி பெறுங்கள். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் இன்று உங்கள் சம்பாதிக்கும் சக்தியை உயர்த்தக் கூடிய அறிவும் – உடல் திறனும் உங்களுக்கு இருக்கும். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்கள் துணையுடன் திருமண பந்தத்தில் இணைந்த்தை உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக இன்று எண்ணுவீர்கள்.

 

துலாம் ராசிபலன்:

உங்கள் பிரச்சினையை சமாளிக்க நண்பரின் உதவியை நாடுங்கள். மறந்துவிட்டு பழையதை நினைத்து புலம்பிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. அதில் உங்களுக்கு எதுவும் கிடைக்காது. ஆனால் உங்கள் மன மற்றும் உடல் சக்திதான் வீணாகும். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். உங்கள் வீட்டு சூழ்நிலையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, மற்ற எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். இன்று, உங்கள் காதல் துணை உங்களை காலம் முழுவதும் சிறிதும் குறைவின்றி நேசிப்பார் என்பதை அறிவீர்கள். நிலுவையில் உள்ள திட்டங்களும் பிளான்களும் இறுதி வடிவத்துக்கு வரும். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். திருமண வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களுக்கு பிறகு, இன்று நீங்கள் என்றுமே நினைத்து மகிழும்படியான பொன்னான நாளாக அமையப்போகிறது.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

உங்களின் விருப்பமான கனவு நிறைவேறும். ஆனால் அதிகமான மகிழ்ச்சி சில பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்துங்கள். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். தூரத்து உறவினரிடம் இருந்து வரும் எதிர்பாராத செய்தி உங்கள் நாளை பிரகாசமாக்கும். உங்கள் காதலுக்கு எதிர்ப்பு எழக்கூடும். வேலை இடத்தில் புதிய பிரச்சினைகள் எழும்- குறிப்பாக நீங்கள் டிப்ளமேட்டிக்காக விஷயங்களைக் கையாளாவிட்டால். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். உங்கள் துணை இன்று உங்கள் தேவையை நிராகரிக்க கூடும். இதனால் நீங்கள் கோபமடையலாம்.

 

தனுசு ராசிபலன்:

குறுகிய மனநிலை போக்கை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உங்கள் வாய்ப்புகளைக் குறைப்பதுடன், உடலின் நல்ல இணக்கத்தையும் பாதித்துவிடும். உங்கள் கடமை உணர்வும் கடின உழைப்பும் கவனிக்கப்படும். இன்று அதற்கு பண வெகுமதியும் கிடைக்கும். கொண்டாட்ட மன நிலையில் இருப்பீர்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு செலவு செய்வதில் ஆனந்தம் கொள்வீர்கள். ஒருதலை காதலில் நேரத்தை வீணடிக்காதீர்கள். வேலையிடத்தில் தொழில் திறமையை மேம்படுத்த திறன் நிலைகளை இம்ப்ரூவ் பண்ண முயற்சி செய்யுங்கள். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. இன்றைய நாள் சிக்கல்கள் நிறைந்த்து. உங்கள் திருமண வாழ்க்கையும் அதில் ஒன்றாகலாம்.

 

மகரம் ராசிபலன்:

ஆரோக்கியத்தைப் பொருத்தவரை இது டல்லான காலம். எனவே என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். நண்பர்கள் உங்களை தவறாக வழிநடத்தக் கூடும். உங்கள் அந்தரங்க உணர்வுகள் / ரகசியங்களை அன்புக்குரியவரிடம் பகிர்ந்து கொள்வதற்கு சரியான நேரமல்ல. உங்கள் வேலையில் திறமையை அதிகரிக்க புதிய டெக்னிக்குகள் பயன்படுத்துங்கள். உங்களை நெருக்கமாக கவனிப்பவர்கள், உங்களுடைய ஸ்டைல் மற்றும் தனிப்பட்ட செயல்முறையில் ஆர்வம் கொள்வார்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். உங்களது சில வேலைகள் உங்கள் துணையின் உடல் நல கோளாறால் தடை படக்கூடும்.

 

கும்பம் ராசிபலன்:

உங்களின் நீடித்த நோயை குணமாக்க புன்னகை சிகிச்சையைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் அதுதான் எல்லா பிரச்சினைகளுக்கும் அருமருந்து. இன்று எதிர்பார்த்த நிதி லாபம் தாமதமாகும். உங்களி்ன் இரக்கமற்ற நடத்தையால் குடும்பத்தினர் அப்செட் ஆவார்கள். சோஷியல் மீடியாவில் உங்கள் துணையின் கடைசி சில ஸ்டேடஸ்களை பாருங்கள். உங்களுக்கு ஒரு இனிமையான சர்ப்ரைஸ் இன்று காத்திருக்கிறது. இன்று புதிய பார்ட்னர்ஷிப்கள் நம்பிக்கையானதாக அமையலாம். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும். இன்று உங்கள் துணையுடன் இன்பமாக கழிக்கும் சிறப்பான நாள்.

 

மீனம் ராசிபலன்:

உங்கள் ஆரோக்கியத்தை புறக்கணிக்காதீர்கள், குறிப்பாக மதுவை தவிர்த்திடுங்கள். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். உங்களின் பெரிய பார்ட்டிக்கு எல்லோரையும் அழைத்திடுங்கள் – உங்கள் குரூப்பிற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யக் கூடிய கூடுதல் சக்தி உங்களுக்கு கிடைக்கும். கண்கள் பொய் சொல்வதில்லை. இன்று உங்கள் இணையின் கண்கள் ஒரு சிறப்பான விஷயத்தை உங்களுக்கு சொல்ல காத்திருக்கிறது. உங்களது நற்செய்கைகளுக்காக வேலையில் இன்று நீங்கள் கௌரவிக்கப்படுவீர்கள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். இன்று உங்கள் திருமண வாழ்வில் மிகவும் சாதகமான நாள்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan (December 16 – December 22 )

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan (December 16 – December 22)

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan ( December 16 – December 22)

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan ( December 16 – December 22)

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan ( December 16 – December 22)

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan ( December 16 – December 22 )

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan (December 16 – December 22)

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan ( December 16 – December 22)

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan ( December 16 – December 22 )

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan ( December 16 – December 22)

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan (December 16 – December 22 )

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan ( December 16 – December 22 )

Facebook Comments
Total Page Visits: 4 - Today Page Visits: 1