சுற்றுலாத் தலமாக மாறிய (வேலைக்காரன் செட்) கொலைகாரக் குப்பம் (Videos)

பாகுபலி படத்தின் பிரமாண்ட அரங்க அமைப்பு மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டதைப் போல வேலைக்காரன் படத்தின் அரங்க அமைப்பும் மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் வேலைக்காரன்.

இந்தப் படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்களைத் தாண்டி படப்பிடிப்பு அரங்க அமைப்பு பற்றிய வீடியோதான் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச்செய்தது.

அந்தப் படப்பிடிப்பு அரங்க அமைப்பிற்காக மட்டும் 6 கோடி வரை செலவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பாகுபலி படம் போன்ற பிரமாண்ட படப்பிடிப்பு தளத்தின் அரங்க அமைப்பு பிரமிப்பை உண்டு பண்ணுவதைப் போலவே வேலைக்காரன் படத்தில் குப்பத்து மக்களின் வாழ்க்கை முறைகளை வெளிப்படுத்தும் கட்டிட அமைப்புகள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கின்றன.

உண்மையில் இது நிஜ வீடா அல்லது செட்டா என்று பார்வையாளர்கள் வித்தியாசம் காண முடியா வண்ணம் அமைத்திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

சென்னை, சாலிகிராமம் பிரசாத் லேப் வளாகத்தில் கலை இயக்குநர் முத்து ராஜின் உழைப்பில் வடிமைக்கப்பட்ட வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பு அரங்க அமைப்பு இன்று (டிசம்பர் 30) பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் இதைப் பார்க்கலாம் என அறிவித்துள்ளனர்.

Facebook Comments