மனநோய் பட்டியலில் வீடியோகேம்

Advertisement

வீடியோ கேம் விளையாட்டுக்களுக்கு அடிமையாவதை மனநோய் என வகைப்படுத்த உலக சுகாதார மையம் ஆலோசித்துவருகிறது.

அன்றையகாலகட்டத்தில் மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஓடியாடி விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். அதனால் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் தற்போதுள்ள நவீன காலத்தில் வீடியோ கேம் விளையாட்டுக்குச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி இருக்கிறார்கள். இவ்வாறு வீடியோ கேமில் அடிமையாகி இருப்பதை மனநோய் பட்டியலில் சேர்க்க ஆலோசனை நடைபெறுகிறது.

அன்றாட வேலைகளைப் புறக்கணிக்கும் அளவுக்கு எந்த நேரமும் வீடியோ கேம்களில் மூழ்கி இருப்பது மனநோயின் அறிகுறி என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இதைச் சர்வதேச நோய்கள் வகைப் பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு ஒன்றையும் உலக சுகாதார மையம் தயாரித்துள்ளது. சர்வதேச நோய்கள் வகைப் பட்டியலை அவ்வப்போது உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு வருகிறது.

அந்தப் பட்டியலை இறுதியாகக் கடந்த 1990ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்நிலையில் வரும் 2018இல் புதுப்பிக்க உள்ள அந்தப் பட்டியலில் வீடியோ கேம் மோகம், மனநோயாக இடம்பெற வாய்ப்புள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Facebook Comments
Total Page Visits: 6 - Today Page Visits: 1