சற்று முன் இத்தாலியில் விராத் கோஹ்லி- அனுஷ்கா சர்மா திருமணம் ! வீடியோ இணைப்பு !

இத்தாலியில் உள்ள மிலன் நகரில் விராட் கோஹ்லி – அனுஷ்கா சர்மா ஜோடி இன்று திருமணம் செய்து கொண்டுள்ளதாக ட்விட்டரில் ஆங்கில செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் சில ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களாக இவர்களது திருமணம் குறித்து செய்திகள் வெளியான நிலையில், இதை அனுஷ்கா சர்மா தரப்பு மறுத்து வந்தது.

இந்நிலையில், கோஹ்லி – அனுஷ்கா சர்மா இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு இத்தாலியில் உள்ள மிலன் நகருக்கு சென்றனர். அங்கு இரு தரப்பினருக்கும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இருவரும் இன்று திருமணம் செய்துகொண்டுள்ளதாக ட்விட்டரில் செய்தி நிறுவனமான ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டு உள்ளது.

இன்னும் சில மணி நேரங்களில் திருமணத்தை அந்த ஜோடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும், விரைவில் மும்பையில் கோலாகலமான முறையில் திருமண வரவேற்பு நடக்கும் என்று கோஹ்லி – அனுஷ்கா தரப்புக்கு நெருக்கமான நபர்கள் தெரிவித்து உள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

திருமணம் தொடர்பான படங்கள் இன்று இணையத்தில் வெளியாகின …

இவர்கள் திருமணம் தொடர்பாக நாம் வெளியிட்ட முன்னைய செய்தி தொகுப்பு ….

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நடைபெற்றுவரும் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

தொடர்ச்சியாக 48 மாதங்கள் விளையாடிவந்த விராட் கோலி தென்னாப்பிரிக்கா அணியுடன் விளையாட உள்ள தொடரில் பங்கேற்க இடையே ஓய்வு தேவை என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் விடுமுறைக்காக இத்தாலி நாட்டுக்குச் சென்றுள்ள நிலையில் அவருக்கும் அவரது காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது என்ற செய்தி வெளியாகி சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ஆனால், அதற்கு அனுஷ்கா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடந்து மீண்டும் அவர்களது திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. விராட் கோலி தரப்பில் இருந்து இதுகுறித்து வெளியான தகவலில் வருகிற 16ஆம் தேதி விராட் கோலி மற்றும் அனுஷ்கா இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது என்றும், பெரும்பாலான நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் உள்ள தஸ்கன் என்ற இடத்தில் அவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து டிசம்பர் 26ஆம் தேதி மும்பையில் வரவேற்பு விழா நடைபெறும் என்றும் தெரிய வந்துள்ளது.

Facebook Comments