தினமும் சிறிது வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

அன்றாட சமையலில் சேர்க்கப்பட்டு வரும் ஒரு பொருள் தான் வெங்காயம். அதோடு இந்த வெங்காயம் பல நோய்களைக் குணப்படுத்த உதவும் ஒரு முக்கிய பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்கள் தான் காரணம்.

வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. மேலும் இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, பயோடின், ஃபோலிக் அமிலம், குரோமியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் வளமாக நிறைந்துள்ளது. அதோடு வெங்காயத்தில் க்யூயர்சிடின் என்னும் ப்ளேவோனாய்டுகள் உள்ளது.
இவ்வளவு சத்துக்களை தன்னுள் அடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இதய ஆரோக்கியம்

வெங்காயம் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைடுகளின் அளவைக் குறைக்கும். இதில் உள்ள சல்பர் என்னும் உட்பொருள், இரத்தத்தை மெலிவடையச் செய்யும் மற்றும் இரத்த தட்டுக்கள் திரட்டுவதைத் தடுக்கும். வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் தமனிகளில் ப்ளேக்குகளின் உருவாக்கத்தைத் தடுத்து தமனிகள் கடினமாவதைத் தடுக்கும் மற்றும் மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கும்.

சுவாச பிரச்சனைகள்

வெங்காயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுவாச குழாய் தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியில் இருந்து விடுவிக்கும். மேலும் வெங்காயம் சளி, இருமல், காய்ச்சல், தும்மல் மற்றும் மூக்கு ஒழுகல் போன்றவற்றையும் தடுக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

உணவினால் உண்டாகும் நோய்களை எதிர்க்கும்

வெங்காயத்தில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மை, உணவுகளால் உண்டாகும் நோய்களை சரிசெய்ய உதவும். இதில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் அல்சர் அபாயத்தைக் குறைக்கும்.

மலச்சிக்கல்

வெங்காயத்தில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். தினமும் சிறிது பச்சை வெங்காயத்தை சாப்பிட்டால், மலச்சிக்கல் தடுக்கப்படும்.

காசநோய்

வெங்காயத்தில் இருக்கும் ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், காசநோயை உண்டாக்கும் மைகோபாக்டீரியத்தை செயலிழக்கச் செய்யும். ஆகவே காசநோய் உள்ளவர்கள், வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது நல்லது.

தாய்ப்பால் உற்பத்தி

பிரசவத்திற்கு பின் பெண்கள் வெங்காயத்தை சிறிது பச்சையாக தினமும் சாப்பிட்டால், அது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும்.

இரத்த அழுத்தம்

வெங்காயத்தில் கலோரிகள், சோடியம் குறைவு மற்றும் கொழுப்புகள் அற்றது. இது இரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

உடல் சுத்தம்

வெங்காயத்தை தினமும் சிறிது பச்சையாக சாப்பிட்டால், உடலினுள் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களின் அளவு குறையும். இதனால் இரத்தமும் சுத்தமாகும்.

புற்றுநோய்

வெங்காயத்தில் உள்ள பைட்டோ கெமிக்கல்களான டைசல்பைடுகள், ட்ரை சல்பைடுகள், க்யூயர்சிடின் போன்றவை இரத்தத்தை மெலிதாக்கும். இதன் விளைவாக உடலினுள் வீக்கம் குறைந்து, புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும்.

செரிமான பிரச்சனைகள்

பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால், செரிமான பிரச்சனைகளான பசியின்மை, வயிற்று உப்புசம் மற்றும் சிறுநீர்ப்பை கோளாறுகள் போன்றவை தடுக்கப்படும்.

இரத்த சோகை

வெங்காயத்தில் உள்ள அதிகளவிலான இரும்புச்சத்து, இரத்த சோகையை சரிசெய்ய உதவும். ஆகவே உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள், தினமும் சிறிது வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுங்கள்.

இரத்த சர்க்கரை அளவு

வெங்காயத்தை ஒருவர் தினமும் சிறிது பச்சையாக சாப்பிட்டால், அது உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, சரியாக அளவில் பராமரிக்க உதவும்.

அன்றாட சமையலில் சேர்க்கப்பட்டு வரும் ஒரு பொருள் தான் வெங்காயம். அதோடு இந்த வெங்காயம் பல நோய்களைக் குணப்படுத்த உதவும் ஒரு முக்கிய பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்கள் தான் காரணம். வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. மேலும் இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, பயோடின், ஃபோலிக் அமிலம், குரோமியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் வளமாக நிறைந்துள்ளது. அதோடு வெங்காயத்தில் க்யூயர்சிடின் என்னும் ப்ளேவோனாய்டுகள் உள்ளது. இவ்வளவு சத்துக்களை தன்னுள் அடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா?

இதய ஆரோக்கியம் வெங்காயம் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைடுகளின் அளவைக் குறைக்கும். இதில் உள்ள சல்பர் என்னும் உட்பொருள், இரத்தத்தை மெலிவடையச் செய்யும் மற்றும் இரத்த தட்டுக்கள் திரட்டுவதைத் தடுக்கும். வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் தமனிகளில் ப்ளேக்குகளின் உருவாக்கத்தைத் தடுத்து தமனிகள் கடினமாவதைத் தடுக்கும் மற்றும் மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கும்.

what happens when you eat raw onions everyday Take Medicines from Your Kitchen. Home Health Tips Subscribe our channel for more easy tips . Keep your health good .

Total Page Visits: 129 - Today Page Visits: 2