இணையத்தில் கசிந்த 2017ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட்கள்

Advertisement

பயனர்களின் தகவல்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு வசதி பாஸ்வேர்ட். பெரும்பாலும் இணையத்தில் தகவல்களைச் சேமித்து வைக்கும் நபர்கள் பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்தி இதனை மேற்கொள்கின்றனர்.

ஆனால், பல்வேறு பயனர்கள் எளிமையாக நினைவு வைத்துக்கொள்வதற்காக மிகவும் எளிமையான பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்தி வருவதால் ஹேக்கர்ஸ்களுக்கு அது மிகவும் எளிமையான ஒன்றாகிவிடுகிறது. அதன்படி கடந்த ஆண்டு மிக எளிமையாக ஹேக் செய்யப்பட்ட பாஸ்வேர்ட்களை ஹேக்கர்ஸ்கள் வெளியிட்டுள்ளனர்.

அதில் “Password” மற்றும் “123456” என்ற பாஸ்வேர்ட்கள் மிக மோசமான எளிதில் ஹேக் செய்யக்கூடியவை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்றே சுமார் 50 லட்சம் பாஸ்வேர்ட்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

கடந்த ஆண்டு மற்றும் அதிகம் பயன்படுத்தப்பட்ட எளிதில் ஹேக் செய்யக்கூடிய பாஸ்வேர்ட்கள் வரிசையில் “12345678”, “123456789”, “qwerty”, “letmein”, “football”, “iloveyou”, “Monkey”, “123123”, “starwars” மற்றும் மேலும் சில அடங்கும் என தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் பாஸ்வேர்ட்களை சிக்கல்களாக வழங்க வேண்டும் என பல்வேறு இணையதளங்களும் தற்போது கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி எழுத்துகள் மட்டுமின்றி எண்கள் மற்றும் சிம்பல்களையும் பயன்படுத்த வேண்டும் என பெரும்பாலான இணையதளங்கள் நிபந்தனை வைத்துள்ளன.

அதன்படி பயனர்கள் பயன்படுத்தும் பட்சத்தில் பாவேர்ட்கள் எளிதில் ஹேக் செய்ய முடியாது. எனவே தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும்.

Facebook Comments
Total Page Visits: 4 - Today Page Visits: 1