சிரிய அகதிகள் முகாமில் ஏஞ்சலினா (Videos)

அகதி குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குக் கல்வி மற்றும் சேவைக்கான பயிற்சிகளை அளிக்க உதவும் ‘டைகர் கேர்ள்ஸ்’ என்ற திட்டத்தைத் தொடங்கிவைத்தார் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி.

பிரபல ஹாலிவுட் நடிகையும், இயக்குநருமான ஏஞ்சலினா ஜோலியை அகதிகளுக்கான ஐ.நா. ஆணையம் 2001இல் நல்லெண்ணத் தூதராக நியமித்தது.

முகாம்களுக்கு நிதி உதவி செய்வது, நிதி திரட்டுவது, அடிப்படை வசதிகள் செய்துதருவது போன்ற முனைப்புகளை மேற்கொண்டுவரும் இவர், அகதிகளைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு வருகிறார்.

அவ்வகையில், தற்போது ஜோர்டான் நாட்டில் உள்ள சிரியா அகதிகள் முகாமுக்குச் சென்றார். சுமார் 85 ஆயிரம் பேர் இந்த முகாமில் அகதிகளாக உள்ளனர். தன் 10 வயது மகளான ஷிலோ ஜூலியுடன் முகாமுக்குச் சென்ற ஏஞ்சலினாவை அங்குள்ளவர்கள் இன்முகத்துடன் வரவேற்றனர்.

அங்குள்ள மக்களைச் சந்தித்துப் பேசி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் இதுதொடர்பான கருத்தரங்கில் பேசிய அவர் “வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் போர் மற்றும் வன்முறையால் மக்கள் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், அகதி குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குக் கல்வி மற்றும் சேவைக்கான பயிற்சிகளை அளிக்க உதவும் டைகர் கேர்ள்ஸ் என்ற திட்டத்தையும் ஏஞ்சலினா ஜோலி தொடங்கிவைத்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிவரப்படி துருக்கியில் மட்டும் 1.6 மில்லியன் பேர் அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகையாளர் சந்திப்பின் போது,

சிரிய அகதிகளுடன் உரையாடும் போது,

பத்திரிகையாளர் சந்திப்பின் போது,

சிரிய அகதிகளுடன் உரையாடும் போது,

Facebook Comments