கதாநாயகியாகிறார் பிக்பாஸ் ஜூலி ! கதாநாயகன் யார் தெரியுமா ?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான ஜூலி தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் கவனம் பெற்ற ஜூலி விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இதனையடுத்து ஜூலி கலைஞர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார்.

இந்நிலையில் தற்போது ஜூலி ‘கே7 புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் துரை சுதாகர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது குறித்து ஜூலி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, படத்தின் கதையைக் கேட்டதும் பிடித்துவிட்டது என்றும், இந்த படம் தன் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்புவதாகவும் கூறினார்.

இந்த படத்தின் டைட்டில், இயக்குநர் போன்ற விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளன.

பப்ளிக் ஸ்டாருக்கு ஹீரோயின் ஆனார் பிக்பாஸ் ஜூலி – விரைவில் படப்பிடிப்பாம்

ஜுலி படத்தில் ஹீரோயினாக நடிக்கிறாரா? கதாநாயகன் யார் தெரியுமா ?

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் கடும் கோபத்திற்கு ஆளானவர் ஜூலி. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்கள் மத்தில் நல்ல வரவேற்பு பெற்றவர். இவர் இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் துன்பத்திற்கு ஆளானார். ஆனால் இவர் அதை சிறிதும் பொருள்படுத்தாமல் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டும் இருக்கிறார். மேலும், சில படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமீபத்தில் கூட ஒரு அப்பளம் விளம்பரத்தில் நடித்தார். இவர் தற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் நடிக்கும் இந்த படத்தை K7 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இவருக்கு ஜோடியாக தப்பாட்டம், ஜூலியும் 4 பெரும், போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நடிக்கிறார். இந்த செய்தி குறித்து ஜூலியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது: “இந்த படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. மேலும் இந்த படம் என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்” என்றார் ஜூலி.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜூலி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஜூலி ரசிகர்கள் மத்தியில் கடும் வெறுப்பை சம்பாதித்தார்.

சமூக வலைத்தளங்களில் ஜூலி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால்., அதுவே ஜூலிக்கு பெரிய விளம்பரத்தை தேடி தந்தது. பிக் பாஸில் கலந்து கொண்டதற்கே ஜூலி கிட்டதட்ட 20 லட்சத்திற்கு மேல் சம்பளமாக பெற்றார் என்று கூறப்பட்டது.

அதன் பிறகு, கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில்., சில தினங்களுக்கு முன்னர் ஒரு அப்பளக் கம்பெனி விளம்பரத்தில் நடித்தார்.

சில நொடிகளே வரும் இந்த விளம்பரத்தை ஜூலி எப்படியும் ஒரு நாள் சூட்டிங்கில் முடித்திருப்பார். ஆனால், இதற்கு அவர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஒரு வருட ஒப்பந்தத்தில் மொத்தம் 10,000,00 லட்சத்திற்கும் மேல் சம்பளமாக வாங்க உள்ளார் என செய்தி வந்துள்ளது.

ரசிகர்கள் யாருக்கும் பிடிக்காது என்று சொல்லப்பட்ட.., ஜுலி காட்டில் பண மழை கொட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

அப்பளம் விற்கும் பிக் பாஸ் ஜூலி

சென்னை: அப்பள விளம்பரத்தில் ஜூலியை பார்த்த ஜூலி வெறியன்ஸ் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எடுத்த நல்ல பெயரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கெடுத்துக் கொண்டார் ஜூலி. அதில் இருந்து நெட்டிசன்ஸ் அவரை திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஜூலிக்கும் நன்றாகவே தெரியும்.

ஜூலி

தன்னை யார் கலாய்த்தாலும், திட்டினாலும் அதை எல்லாம் ஜூலி கண்டுகொள்வதே இல்லை. அவர் தான் கண்டுக்க மாட்டேன் என்கிறார் என நெட்டிசன்ஸும் ஓயும் இல்லை.

விளம்பர படம்

கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ஜூலி விமல் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் அருணா அப்பள விளம்பரத்தில் நடித்துள்ளார்.

டிவி, கோலிவுட், விளம்பர படம் என்று ஜூலி அடுத்தடுத்து பிசியாகிக் கொண்டிருப்பதை பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தன்னை பலர் வெறுத்தும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் முன்னேறிச் செல்வது சாதாரண விஷயம் அல்ல என்கிறார்கள் ஜூலி வெறியன்ஸ்.

ஜூலியின் விளம்பர படத்தை பார்த்த ஜூலி வெறியன்ஸ் உன் சமையல் அறையில் நான் உப்பா, சர்க்கரையா என்று கேட்பது போன்ற மீம்ஸ் ஃபேஸ்புக்கில் வலம் வருகிறது.தோல்விகள் காண வெற்றிகள் இல்லை. விழுந்து விட்டால் எழத்தான் வேண்டும் எழுந்து விடடாய் தங்கையை.. மீண்டும் விழுந்தது விடாமல், யார் என்ன சொன்னாலும் கவலை படாமல் உன் சிகரத்தை எட்டு.

அப்பளம் விற்கும் பிக் பாஸ் ஜூலி

ஜூலியின் அப்பள விளம்பரத்தை நெட்டிசன்ஸ் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்து கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் ஜூலி. இந்நிலையில் அவர் அருணா அப்பள விளம்பரத்தில் நடித்துள்ளார். விளம்பரத்தில் நடித்ததில் மகிழ்ச்சி என்று ஜூலி ட்வீட்டியுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்ஸ் கூறியிருப்பதாவது,

நாங்க இனி அப்பளமே சாப்ட மாட்டோம் ஆத்தா..!!

நெட்டிசன்களின் கலக்கல் மீம்ஸ் #1

நெட்டிசன்களின் கலக்கல் மீம்ஸ் #2

நெட்டிசன்களின் கலக்கல் மீம்ஸ் #3

நெட்டிசன்களின் கலக்கல் மீம்ஸ் #4

நெட்டிசன்களின் கலக்கல் மீம்ஸ் #5

நெட்டிசன்களின் கலக்கல் மீம்ஸ் #6

நெட்டிசன்களின் கலக்கல் மீம்ஸ் #7

இணையத்தில் வெளியான விளம்பர வீடியோ இணைப்பு –

இந்த விளம்பரத்துக்கு எவ்ளோ சம்பளம் இருக்கும்? Bigg Boss Julie #Julie Advertisement

Facebook Comments