அழிவை நோக்கி சொக்லேட்: பிரியர்கள் அதிர்ச்சி

Advertisement

அதிகரித்துவரும் புவி வெப்பம், பருவநிலை மாறுதல் காரணமாக 2050ஆம் ஆண்டிற்குப் பிறகு கொக்கோ மரங்கள் அழியும் வாய்ப்புள்ளதாக அமெரிக்க நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தச் செய்தி சாக்லேட் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகின் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

கொக்கோ மரங்கள் வளர்வதற்கு அதிகப்படியான மழை தேவை. அடுத்த 30 ஆண்டுகளில் 2.1 செல்சியஸ் வெப்பநிலை கூடும். இதனால் சாக்லேட் உற்பத்தி அதிக அளவு பாதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

உலகின் அனைவரும் விரும்பி உண்ணும் இனிப்புகளில் ஒன்று சாக்லேட். கொக்கோ மரங்களிலிருந்து கிடைக்கப்படும் கொக்கோ பீன்ஸ், சாக்லேட்டின் மூலப்பொருளாகும். கசப்புச் சுவை கொண்ட இதனுடன் இனிப்பு சேர்க்கப்பட்டு சாக்லேட் செய்யப்படுகிறது. மற்ற மரங்களைப் போல கொக்கோ மரங்களை புதிய தொழில்நுட்பங்களின் மூலம் உருவாக்க முடியாது.

90 சதவீத கொக்கோ மரங்கள் சிறிய அளவிலான பண்ணைகள் மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. மழையின் அளவு குறைவதால் கொக்கோ மரங்களின் வளர்ச்சியும் குறைந்துகொண்டே செல்கிறது.

Facebook Comments
Total Page Visits: 5 - Today Page Visits: 1