2018இல் புறப்பட்ட விமானம் 2017இல் தரையிறங்கிய அதிசயம்: பயணிகள் அதிர்ச்சி!

ஹவாய் நாட்டின் விமானம் ஒன்று இந்த ஆண்டு பயணத்தை ஆரம்பித்து கடந்த ஆண்டு நிறைவு செய்த ஆச்சரியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த விடயம் தற்பொழுது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.உலகில் உள்ள கண்டங்களுக்கு இடையேயான நேர வேறுபாட்டால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உலகிலேயே நியூசிலாந்து நாட்டில் தான் புத்தாண்டு முதலில் பிறக்கிறது. அந்த வகையில், நியூசிலாந்தில் 2018 ஆம் ஆண்டு பிறந்தவுடன், அங்குள்ள ஆக்லாந்து நகரில் இருந்து ஹவாயியன் எயார்லைன் 446 என்ற விமானம் கிளம்பியது. அங்கிருந்து அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள ஹோனோலுலு நகரில் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி 10.15 மணிக்குத் தரையிறங்கியது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ஹவாய் எயார்லைன்ஸ் நிறுவனம், தாம் இவ்வாறு நடக்கும் என எதிர்பார்க்கவில்லை எனவும், டிசம்பர் 31 அன்று இரவு 11:55க்கு புறப்படவிருந்த விமானமே பத்து நிமிட தாமதத்தின்பின்னர் புறப்பட நேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் தமது விமானத்தின் பயணிகள் இரண்டு புத்தாண்டுகளைக் கொண்டாடிய அனுபவத்தைப் பெற்றதாக மேற்படி விமான நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, பூமியின் கிழக்கு-மேற்கு நெட்டாங்கு நேர வலயத்தின் பிரிப்பினால் ஹவாய் நாட்டிற்கும் நியூஸிலாந்து நாட்டிற்குமிடையில் பாரிய நேர வேறுபாடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னதாக டிசம்பர் 31 ஆம் திகதி 11.55 மணிக்கு விமானம் ஆக்லாந்தில் இருந்து கிளம்புவதாக இருந்தது. ஆனால் 10 நிமிட தாமதம் காரணமாக புத்தாண்டு நள்ளிரவு 12.05 மணிக்குக் கிளம்பியுள்ளது. அங்கிருந்து 9 மணி நேரப் பயணம் செய்து டிசம்பர் 31 ஆம் திகதி இரவு 10.15 மணிக்கு விமானம் தரையிறங்கியது.நியூசிலாந்திற்கும் ஹவாய் தீவிற்கும் இடையே சுமார் 23 மணி நேர இடைவெளி இருந்ததால் இந்த சம்பவம் நடந்தது.

”காலங்களுக்கு இடையேயான பயணம் இது!” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Time is an illusion, people.

Thanks to an unexpected 10 minute delay, a flight has taken off in 2018 – and will land in 2017.The Hawaiian Airlines flight HAL446 was supposed to depart Auckland, New Zealand, at 11.55pm local time.However, it was delayed by 10 minutes, meaning it actually ended up taking off at 12.05am on January 1, 2018.The plane is flying to Honolulu, which is 23 hours behind Auckland.
Because of this, it will arrive at 10.16am local time – on December 31, 2017.

Facebook Comments