நீர் உடம்பை எளிதில் குறைக்க வேண்டுமா? அப்ப இத சாப்பிடுங்க…

உடம்பில் அதிகம் நீர் சேர்வதால் உடம்பு பெருத்து பருமனுடன் காணப்படும். இவர்களுக்கு எந்த வகையான மருந்து கொடுத்தாலும் உடல் பருமன் குறையாது. இந்த நிலையை நீர்க்கட்டு அல்லது திரவக் கோர்வை என்று அழைப்பர். உங்கள் பாதம், கை கால் விரல்கள், கைகள் மற்றும் மூட்டுக்கள் காரணமின்றி வீங்கி காணப்படுகிறதா? அப்படியெனில் கவனமாக இருங்கள்.பொதுவாக இம்மாதியான நிலையை கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திப்பார்கள். மேலும் உடலுழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கும் இம்மாதிரியான பிரச்சனை வரக்கூடும். சரி, ஒருவருக்கு திரவக் கோர்வை எந்த காரணங்களால் வரக்கூடும்? உப்பு நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கேன்களில் அடைக்கப்படும் உணவுகளை உட்கொள்வது, போதிய அளவு நீர் அருந்தாமல் இருப்பது போன்றவற்றால் வரும்.

சரி, நீர் தேக்கத்தால் உடல் பருமனடைவதை எப்படி தடுப்பது என்று கேட்கலாம். நிச்சயம் ஒருசில உணவுகளின் மூலம் நீர் உடம்பைக் குறைக்க முடியும். கீழே நீர் உடம்பைக் குறைக்க உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை உணவில் சேர்த்து வந்தால், விரைவில் உடல் பருமனைக் குறைக்கலாம்.

முட்டை

முட்டையில் உள்ள அதிகப்படியான புரதம், பொட்டாசியம், மக்னீசியம் உள்ளது. உடலில் அதிக அளவில் நீர் உள்ளவர்கள் தினம் முட்டையை காலை உணவாக மிகச் சிறந்தது. ஏனெனில், முட்டை உடலில் உள்ள அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றி உடலை சீராக வைத்துக்கொள்ள பெரிதும் உதவும். குறிப்பாக வேக வைத்த முட்டையை சாப்பிடுவது சிறந்தது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் ஒரு நீர் காய். தினந்தோறும் உணவில் வெள்ளரிக்காயை ஜூஸாகவோ, சாலட் ஆகவோ சாப்பிடுவது உடலில் நீர்சத்து குறையாமல் தக்க வைக்க உதவும். மேலும், உடலில் இருக்கும் தேவையற்ற நீரை வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்துக்கொள்வதோடு, ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மூங்கில் தண்டு

மூங்கில் தண்டில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இதனை சாப்பிடும் போது உடலில் உள்ள சோடியத்தை அளவை குறைப்பதோடு, உடலில் இருந்து சிறுநீரகம் வெளியேறுவதை அதிகப்படுத்தி உடலை சுத்தமாக வைத்துக் கொள்கிறது. மேலும், உடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற நீரை வெளியேற்ற உதவக்கூடியது.

கிரான்பெர்ரி

கிரான்பெர்ரியில் அதிக அளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. உடலில் அதிகப்படியான நீர் தேங்கியதால் பருமன் ஏறி அவதிப்படுபவர்கள் கிரான்பெர்ரியை சாப்பிட, நீர் வெளியேறி உடல் பருமன் குறையும். கிரான்பெர்ரியை ஜூஸாகவோ, பழமாகலோ, உலர் பழமாகவோ சாப்பிடலாம்.

ராஸ்ப்பெர்ரி

ஆன்டிஆக்ஸிடன்ட், அதிகப்படியான பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் பி6 ஆகியவற்றை உள்ளடக்கிய பழம் ராஸ்பெர்ரி. இந்த சத்துக்கள் உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றி உடல் பருமனை குறைக்கும்.

செர்ரி

செர்ரி பழத்தில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் உள்ள நீர்த்தேக்கத்தை அகற்றுவதோடு, அதனால் ஏற்படக்கூடிய உடல் பருமனை தடுக்கிறது.

கூனைப்பூ

கூனைப்பூக்களில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் குறைவாக இருப்பதோடு, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகளவிலும் உள்ளது. இவற்றை உணவில் அடிக்கடி சேர்ப்பதன் மூலம், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையால், நீர்த்தேக்க பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

பீட்ரூட்

பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் நிறைந்த பீட்ரூட், உடலில் உள்ள தேங்கியுள்ள அதிகளவு நீரைக் குறைக்க உதவும். எனவே உடம்பில் நீர் அதிகம் சேர்ந்து உடல் பெருந்திருந்தால், அத்தகையவர்கள் தங்களது உணவில் பீட்ரூட்டை அடிக்கடி சேர்த்து வர, உடல் பருமன் குறையும்.

தர்பூசணி

பலரும் விரும்பி சாப்பிடும் ஓர் பழம் தான் தர்பூசணி. இந்த தர்பூசணியில் பொட்டாசியம் மற்றும் வளமான அளவில் நீர்ச்சத்தும் உள்ளது. என்ன தான் இதில் நீர் இருந்தாலும், அது உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்ற உதவும். ஆகவே நீர் உடம்பு கொண்டவர்கள் எடையைக் குறைக்க, அன்றாடம் சிறிது தர்பூசணியை சாப்பிடுங்கள்.

செலரி

செலரியில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகளவில் உள்ளது. அதோடு செலரியில் பொட்டாசியமும் அதிகம் உள்ளது. எனவே இந்த செலரியை டயட்டில் அடிக்கடி சேர்க்க நீர் உடம்பு குறையும்.

அவகேடோ

அவகேடோ பழம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றே. இதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் மற்றும் பொட்டாசியம், அதிக நீர் தேக்கத்தால் உருவான தொப்பையைக் குறைக்க உதவும். அதற்கு அவகேடோ பழத்தை அப்படியே அல்லது ஜூஸ் வடிவில் உட்கொள்ளலாம்.

இஞ்சி

இஞ்சி, நீர் உடம்பு கொண்டவர்களுக்கு மிகவும் சிறப்பான ஓர் உணவுப் பொருள். இஞ்சியில் உள்ள நீர்ப்பெருக்கி பண்புகள், உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் அதிகப்படியான நீரை, சிறுநீர் வழியே வெளியேற்றும்.

கிட்னி பீன்ஸ்

கிட்னி பீன்ஸை ஒருவர் தங்களது டயட்டில் அடிக்கடி சேர்த்து வருவதன் மூலம், நீர்த்தேக்கத்தால் உடல் பருமனடைவதை தடுக்கலாம். இதற்கு கிட்னி பீன்ஸில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசிய சத்துக்கள் தான் முக்கிய காரணம்.

கருப்பு பீன்ஸ்

கருப்பு பீன்ஸில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. அதோடு, இதில் பொட்டாசியம் மற்றும் மக்னீயம் அதிகம் உள்ளது. எனவே இந்த கருப்பு பீன்ஸை அன்றாட உணவில் சிறிது சேர்க்க, நீர் உடம்பைக் குறைக்கலாம்.

அன்னாசி

அன்னாசியில் உள்ள முக்கிய உட்பொருளான அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பொட்டாசியம், அதிக நீர் தேக்கத்தால் உடல் குண்டாவதைத் தடுக்க உதவும். எனவே அன்னாசிப் பழம் கிடைக்கும் போது தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

வெறும் 10 ரூபாயில் 7 நாளில் தொப்பையை குறைக்கலாம்! முயற்சி செய்யுங்கள்

இந்த ஜூஸை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்த பின் இடைவெளி விட வேண்டும். முக்கியமாக நீங்கள் ஏதேனும் மருந்து மாத்திரைகளை அன்றாடம் எடுத்து வருபவராயின், மருத்துவரிடம் இந்த ஜூஸ் குறித்து சொல்லி, அவரது அனுமதியின் பேரில் பின்பற்றுவதே நல்லது.

நம் அனைவருக்குமே முருங்கைக் கீரை உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிப்பதில் மிகவும் சிறந்த ஓர் உணவுப் பொருள் என்பது தெரியும். ஆனால் அந்த முருங்கைக் கீரை நம் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவும் என்பது தெரியுமா?

என்ன நம்பமுடியவில்லையா? ஆம், உண்மையிலேயே முருங்கைக் கீரை நம் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, கொழுப்புக்களையும் கரைத்து வேகமாக தட்டையான வயிற்றைப் பெற உதவும்.

இப்போது ஏழே நாட்களில் தட்டையான வயிற்றைப் பெற முருங்கைக் கீரையை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து காண்போம்.

தேவையான பொருட்கள்:

முருங்கைக் கீரை – 1/4 கப்

தண்ணீர் – 1 கப்

எலுமிச்சை – 1/2

தேன் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மிக்ஸியில் 1 கப் நீர் ஊற்றி, அதில் முருங்கைக் கீரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை வடிகட்டி, அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, தேன் சேர்த்து கலந்தால், ஜூஸ் தயார்.

குடிக்கும் முறை:

இந்த முருங்கைக் கீரை ஜூஸை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது இரவு உணவு உண்ட 1/2 மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்.

குறிப்பு

இந்த ஜூஸை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்த பின் இடைவெளி விட வேண்டும். முக்கியமாக நீங்கள் ஏதேனும் மருந்து மாத்திரைகளை அன்றாடம் எடுத்து வருபவராயின், மருத்துவரிடம் இந்த ஜூஸ் குறித்து சொல்லி, அவரது அனுமதியின் பேரில் பின்பற்றுவதே நல்லது. மேலும் இந்த ஜூஸ் குழந்தைகளுக்கோ அல்லது 5 வயதிற்குட்பட்ட சிறுவர்/சிறுமியர்களுக்கோ கொடுக்கக்கூடாது.

இப்போது முருங்கைக் கீரையின் இதர நன்மைகளைக் காண்போம்.

நன்மை #1

முருங்கைக் கீரையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், இது உடலினுள் இருக்கும் உட்காயங்கள் அல்லது அழற்சியைக் குறைக்க உதவும்.

நன்மை #2

முருங்கைக் கீரை குடலை சுத்தம் செய்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நன்மை #3

முருங்கைக்கீரை உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, நோய்களின் தாக்குதலைத் தடுக்கும்.

நன்மை #4

முருங்கைக்கீரை உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கலோரிகளை வேகமாக கரைக்க உதவி, அசிங்கமான தொப்பை மற்றும் உடல் பருமனைக் குறைக்க உதவும்.

முருங்கைக்கீரையின் சிறப்பு

முருங்கைக் கீரையில் பசலைக் கீரையை விட 25 முறை அதிகமாக இரும்புச்சத்தும், ஆரஞ்சு பழத்தை விட 7 மடங்கு அதிகமாக வைட்டமின் சி சத்தும், வாழைப்பழத்தை விட 15 மடங்க அதிகமாக பொட்டாசியமும், முட்டையை விட 4 மடங்கு அதிகமாக புரோட்டீனும், கேரட்டை விட 10 மடங்கு அதிகமாக வைட்டமின் ஏ சத்தும், பாலை விட 17 மடங்கு அதிகமாக கால்சியம் சத்தும் உள்ளது.

செயல்முறை வீடியோ இணைக்கப்பட்டுள்ளது –

சிறுநீரில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை விட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?

நம்முடைய சித்தர்கள் எந்த ஒரு டாக்டரின் துணை இன்றி அவர்களுடைய சிறுநீரை அவர்களாகவே சோதனை செய்து, என்ன வியாதி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள்.

சித்தர்கள் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்க்கும் முறை அவ்வளவு கஷ்டமானது கிடையாது.

அந்த முறையைப் பயன்படுத்தி நாமே நம்முடைய சிறுநீரைப் சோதனை செய்து தெரிந்து கொள்ள முடியும்.

நம்முடைய உடலில் உண்டாகும் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் தான் காரணம் என்று ஆரம்பத்திலே நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்,

அதில் எந்த ஒன்று நம்முடைய உடலில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டாலே போதும் அதை நாம் குணப்படுத்த முடியும்.

இதைத்தான் நம்முடைய சித்தர்கள் சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்தனர். இந்த மூன்றும் சிறுநீரில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வைத்து நோயை குணபடுத்தி உள்ளனர்.

எவ்வாறு செய்யலாம்..?

காலையில் எழுந்ததும் சிறுநீரை ஒரு தெளிவான கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை அதில் விட்டு சிறுது நேரம் கழித்து பாருங்கள். அறிவியல் ரீதியாக என்ன நடக்கிறது..?

அந்த எண்ணெய்த்துளி சிறுநீரின் மேல் கயிறு போல நெளிந்து காணப்பட்டால் உடலில் வாதம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்று பொருள்..அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக அதை குணபடுத்த பார்க்க வேண்டும்..

அதுவே மோதிரம் போல வட்ட வடிவில் அல்லது கோள வடிவில் இருந்தால் உங்களுக்கு பித்த நோய் இருப்பதாக பொருள்..

சிறுநீரின் மேல் எண்ணெய் முத்துப்போல் அங்கொன்று இங்கொன்றாக நின்றுகொண்டிருந்தால் கபம் அதிகமாக இருக்கிறதென்று பொருள்.

அதேபோல் எண்ணெய்த்துளி மிக வேகமாக சிறுநீருக்குள் பரவினால் நோய் விரைவில் குணமடையும் என்பதாக பொருள்.

எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாத் தாமதமாகும்.உடனடியாக அதை குறைக்க நடவடிக்கை எடுப்பது நல்லது

அதுவே எண்ணெய்த்துளி சிதறினாலோ சிறுநீருக்குள் அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த முடியாது.மிகவும் சிரமமான நிலை என்று அர்த்தம்..

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Facebook Comments